வாழைத்தார் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழைத்தார் ஏலத்தில் பங்கேற்க அழைப்பு

Added : செப் 13, 2018
Advertisement

அன்னுார்:அன்னுார் - சத்தி ரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்படுகிறது. ஒவ்வொரு வாரமும் செவ்வாயன்று வாழைத்தார் ஏல விற்பனை நடக்கிறது. இந்த வாரம் நடந்த ஏலத்தில், 19 விவசாயிகள் பங்கேற்றனர். பூவன், ரஸ்தாளி ரக வாழைத்தார்கள் வந்திருந்தன. குறைந்த பட்சமாக ஒரு கிலோ, 41 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 45 ரூபாய்க்கும் விற்றது.ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவரஞ்சனி கூறுகையில்,''வாரந்தோறும் நடத்தப்படும் ஏலத்தில் வாழை விவசாயிகள், வியாபாரிகள் பங்கேற்கலாம். இங்கு இருப்பு வைத்தால், குறைந்த வட்டிக்கு கடனும் தரப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X