ரூ.38.23 கோடியில் தூர்வாரும் பணி குறைகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.38.23 கோடியில் தூர்வாரும் பணி குறைகள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை:சென்னையில், 38.23 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால்வாய் துார்வாரும் பணிகள் நடந்து வருகிறது. 'பணிகளில் குறைகள் கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என, கமிஷனர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிவிப்பு:சென்னை மாநகராட்சியில், 7,350 இடங்களில், 1,894 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், பருவமழை துவங்குவதற்கு முன், மழைநீர் வடிகால்வாய்கள் துார்வாரப்படுகின்றன.
ரூ.17.83 கோடி
இந்தாண்டு, மழைநீர் வடிகால்களை துார்வாரும் பணி மற்றும் பழுது நீக்கும் பணிகளுக்காக, மண்டல வாரியாக, 20.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.மழைநீர் உட்செல்ல உள்ள வழிகள் மற்றும் குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றவும், கால்வாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை அகற்றுவதற்கும், 174 பணிகளுக்கு, 17.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன.
மக்கள் தொகை நெருக்கமாக உள்ள பகுதிகள், வணிக பகுதி மற்றும் கழிவு நீர் கால்வாய்கள் இல்லாத இடங்களில், கழிவுநீர் கலக்கும் வடிகால்களில், உயர்திறன் கொண்ட, உறிஞ்சும் இயந்திரங்கள் வாயிலாக துார்வாரப்படுகிறது. இந்த பணிகள், அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்படும்.
மாநகராட்சியால், 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதில், கொடுங்கையூர், ஏகாங்கிபுரம், மாம்பலம், எம்.ஜி.ஆர்., நகர் கால்வாய்கள், சுவிட்சர்லாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட, இயந்திரத்தின் வாயிலாக துார்வாரப்பட்டு வருகிறது.
இதேபோல், பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, விருகம்பாக்கம், கேப்டன் காட்டன் கால்வாய்களில் உள்ள ஆகாயத்தாமரை, பின்லாந்து நாட்டிலிருந்து வரவைக்கப்பட்ட, இயந்திரம் வாயிலாக அகற்றப்பட்டு, துார்வாரப்படுகிறது.
நடவடிக்கை
இந்த, 30 நீர்வழிக் கால்வாய்களில், இயந்திரத்தின் வாயிலாக, சுழற்சி முறையில் துார்வாரப்படுகிறது. இதுவரை, 45 ஆயிரம் டன் ஆகாயத்தாமரை மற்றும் வண்டல் மண் அகற்றப்பட்டுள்ளன.
மேலும், நீர்வழிக்கால்வாய்களில் மிதக்கும் குப்பை, முகத்துவாரத்திற்கு செல்லாமல் தடுக்கும் வகையில், மிதக்கும், என்ற வலை கால்வாய்களில், 10 இடங்களில் பொருத்தப்பட்டு மிதக்கும் குப்பை அகற்றப்படுகிறது.
மழைநீர் வடிகால்கள் துார்வாருதல் மற்றும் பழுது நீக்கும் பணிகளை, பருவமழை துவங்குவதற்கு முன், விரைந்து முடிக்க வேண்டும்.துார்வாரும் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என்பதை மண்டல அலுவலர்களும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் அவ்வப் போது ஆய்வு செய்ய வேண்டும்.இப்பணிகளில், குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X