நடிகர் சல்மான்கான் மீது எப்.ஐ.ஆர்., பதிய உத்தரவு| Dinamalar

நடிகர் சல்மான்கான் மீது எப்.ஐ.ஆர்., பதிய உத்தரவு

Added : செப் 13, 2018
Advertisement

முசாபர்புர்;ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக, பிரபல பாலிவுட் நடிகர், சல்மான்கான் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி, பீஹார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீஹார் முசாபர்புரைச் சேர்ந்த வழக்கறிஞர், சுதிர் குமார் ஓஜா என்பவர், அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது:பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தயாரிப்பில், ஹிந்தியில், 'லவ்ராத்திரி' என்ற பெயரில் புதிய திரைப்படம் தயாரிக்கப்பட்டுஉள்ளது. இந்தப் படத்தின் சில காட்சிகள் சமீபத்தில் வெளியிடப்பட்டுஉள்ளன.படத்தின் தலைப்பு, ஹிந்துக்களின் பண்டிகையான, நவராத்திரியை கிண்டல் செய்வது போல உள்ளது. படத்தின் காட்சிகளிலும் ஆபாசம் அதிகமாக உள்ளது. இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் காட்சிகள், ஹிந்து மதத்தினரை புண்படுத்துவது போல் உள்ளது.சல்மான் கான், படத்தின் இயக்குனர், நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதை, விசாரணைக்கு ஏற்ற, மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சல்மான் கான் உள்ளிட்டோர் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி, காவல்துறைக்கு உத்தரவிட்டுஉள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X