போலீஸ் டைரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : செப் 13, 2018
Advertisement

போலீஸ்காரரை தாக்கியவர் கைது

தாம்பரம் அடுத்த பெருங்களத்துார் பேருந்து நிலையம் அருகில், நேற்று முன்தினம் மாலை, லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, தாம்பரம் போக்குவரத்து பிரிவு காவலர் ஞானசேகர், 32, என்பவர், நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மது போதையில் வந்த ஆசாமி ஒருவர், ஞானசேகரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், ஞானசேகரை தாக்கி உள்ளார்.
பீர்க்கன்காரணை போலீசார், சதானந்தபுரத்தை சேர்ந்த சாமிநாதன், 51, என்பவனை, நேற்று முன்தினம் இரவு, கைது செய்தனர்.
மது விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது
அண்ணாசாலை, காவல் எல்லைக்கு உட்பட்ட, திரு.வி.க.,சாலையில் நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த, தேவி, 38, என்பவளிடம் விசாரித்தனர்.அதில் அவள், மது விற்பனையில் ஈடுபட்டு வந்தது, தெரியவந்தது. இதையடுத்து நேற்று, அவளை கைது செய்த போலீசார், 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ரூ.12 லட்சம் மோசடி
மயிலாப்பூர், மாங்கொல்லையைச் சேர்ந்தவர், சரவணன், 43. இவர், தன் நண்பரான ராஜேஷ் கண்ணாவிற்கு, சில மாதங்களுக்கு முன், 14 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இதில், 2 லட்சம் ரூபாயை மட்டும், அவர் திருப்பி கொடுத்துள்ளார்.மீதமுள்ள, 12 லட்சம் ரூபாயை, ராஜேஷ் கண்ணா தர மறுத்தார். சரவணன் அளித்த புகாரின்படி, அபிராமபுரம் போலீசார், ராஜேஷ் கண்ணாவிடம் விசாரித்து வருகின்றனர்.
ஆட்டோவில் கஞ்சா கடத்தல்
டி.பி.சத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட, அமைந்தகரை, 'டோல் கேட்' அருகே, நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர்.அதில், இருக்கைக்கு பின்புறம், 3 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோவில் வந்த பெண் ஒருவர் உட்பட ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.கஞ்சா மற்றும் ஆட்டோவை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
'இன்பார்மரை' தாக்கியவன் கைது
கண்ணகிநகர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர், சரவணன், 35. 'போலீஸ் இன்பார்மராக' இருந்துள்ளார்.கடந்த மாதம், அதே பகுதியை சேர்ந்த, கஞ்சா வியாபாரி மோகனா, கூலிப்படையை ஏவி, சரவணனை சரமாரியாக தாக்கினாள்.கண்ணகிநகர் போலீசார், மோகனா உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த டில்லிபாபு, 29, என்பவனை, நேற்று கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


புகையிலை விற்ற இருவர் கைது

கானத்துார், ரெட்டி குப்பத்தை சேர்ந்த பக்கர் சந்ரூ, 28; மளிகை கடை நடத்தி வருகிறான். கடையில், தடைசெய்யப்பட்ட புகையிலை விற்று வந்தான். கானத்துார் போலீசார், நேற்று, கடையை சோதனை செய்து, 50 கிலோ புகையிலையை பறிமுதல் செய்தனர்.பக்கர் சந்ரூ மற்றும் புகையிலை சப்ளை செய்த பிரகாஷ், 38, ஆகியோரை, போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
இளம்பெண்ணை ஏமாற்றியவன் கைது
செங்குன்றம் அடுத்த விளாங்காடுபாக்கம், கன்னம்பாளையத்தை சேர்ந்தவன், பிரேம்குமார், 24. செங்குன்றம் மின் வாரிய அலுவலகத்தில், ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தான்.
தன் வீட்டருகே வசித்த இளம்பெண்ணை, திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்தான்.இது குறித்த புகாரின்படி, மாதவரம் அனைத்து மகளிர் போலீசார், பிரேம்குமாரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X