சீமை கொய்யா 'சீசன்' துவக்கம்! உற்பத்தி அதிகரித்தால் பயன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சீமை கொய்யா 'சீசன்' துவக்கம்! உற்பத்தி அதிகரித்தால் பயன்

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குன்னுார்:குன்னுாரில் மருத்துவ குணம் வாய்ந்த 'சீமை கொய்யா' சீசன் களை கட்டியுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், மலை வாழை, நாகா, புணுகு, அத்தி, குரங்குபழம், ஊசி, தவுட்டு, விழாத்தி, விக்கி, பேரி, கொய்யா, பிளம்ஸ், ஊட்டி ஆப்பிள், ஆரஞ்ச், பெர்சிமென், ரம்புட்டான் போன்ற பல வகை பழங்கள் விளைகின்றன.இதில் 'பிஸ்டியூம் கோவா' என்ற தாவர இனத்தில், 'மிர்ட்டேசி' என்ற தாவரவியல் பெயர் கொண்ட, சீமை கொய்யா பழம், தற்போது குன்னுார் பகுதிகளில் உள்ள சிறிய வகை மரங்களில் வளர்கின்றன. ஜூன் மாதம் முதல் செப்., வரையில், இதன் சீசன் காலமாகும். புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையால் குழந்தைகள் அதிகம் விரும்பி உண்கின்றனர்.சிம்ஸ்பார்க், காட்டேரி, அருவங்காடு, கிளண்டேல் உட்பட சில இடங்களில் மட்டுமே இவ்வகை மரங்கள் வீடுகளிலும், அலுவலக தோட்டங்களிலும் வளர்க்கப்பட்டுள்ளன.ஜீரண சக்தியை அதிகரிக்கவும், வயிற்றுபோக்கை நிறுத்தவும், இதய நோய்களை தடுக்கவும் பயனுள்ளதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளதால், இவற்றை பொதுமக்கள் வாங்கி செல்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், சிம்ஸ்பார்க் உட்பட சில இடங்களில் மட்டுமே இவை கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.விவசாயிகள் கூறுகையில்,' இந்த அரிய பழத்தைஅதிகளவில் உற்பத்தி செய்ய தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை எடுத்தால், தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக பயிரிட்டு அதிக லாபம் காட்ட முடியும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X