மனுநீதிநாள் கூட்டம்: ரூ.35 லட்சத்தில் நல உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனுநீதிநாள் கூட்டம்: ரூ.35 லட்சத்தில் நல உதவி

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோத்தகிரி:கோத்தகிரியில் நடந்த மனுநீதிநாள் கூட்டத்தில், 35 லட்சம் ரூபாய் செலவில், 110 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கோத்தகிரி எஸ்.கைக்காட்டி அம்மன்நகர் கிராமத்தில், மனுநீதிநாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:அம்மன்நகர் கிராமத்தில், 7 வளர்ச்சி பணிகளுக்காக, 23 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நெடுகுளா ஊராட்சிக்கு உட்பட்ட குக்கிராமங்களில், 2016 முதல், 2018ம் ஆண்டுவரை, 7.14 கோடி ரூபாய் செலவில், 179 வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பயன்பெற, தகுதியுள்ள பயனாளிகள் உரிய ஆவணங்களை பதிவு செய்யவேண்டும்.தாயகம் திரும்பியோர் பயன்பெறும் விதமாக, 1000 வீடுகள் கட்டுவதற்கு சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில், 820 வீடுகள் கட்டுவதற்கு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி வந்தவுடன், படிப்படியாக வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.கிராமங்களில், 100 நாள் வேலை திட்டத்தில், பொதுமக்களின் பங்களிப்பு இருக்கவேண்டும். அப்போதுதான், பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். இவ்வாறு, கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவி தொகை, பயிர் கடன், தோட்டக்கலை துறை உதவிகள் என, 110 பயனாளிகளுக்கு, 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான நடத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.மேலும், பொதுமக்களிடம் இருந்து, பல்வேறு கோரிக்கைகள் குறித்த 130 மனுக்கள் பெறப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில், எம்.எல்.ஏ., சாந்திராமு, ஆர்.டி.ஓ., பத்ரிநாத், தாசில்தார் ரவிக்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X