விநாயகர் சிலை பாதுகாப்பு; ரூ.600 கோடி இன்சூரன்ஸ் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

விநாயகர் சிலை பாதுகாப்பு; ரூ.600 கோடி இன்சூரன்ஸ்

Added : செப் 13, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Ganesh Chaturthi ,Vinayagar Chathurthi, Happy Vinayagar Chathurthi ,விநாயகர் சதுர்த்தி 2018, விநாயகர் சிலை பாதுகாப்பு, விநாயகர் சிலை இன்சூரன்ஸ் , ganesh chaturthi, vinayagar chaturthi, விநாயகர் சதுர்த்தி, கணேஷ் சதுர்த்தி,  கணேச சதுர்த்தி 2018 , ஹாப்பி விநாயகர் சதுர்த்தி, Ganpati Bappa Morya ,விநாயகர் சதுர்த்தி விழா,விநாயகர் சிலை, Vinayagar Chaturthi Festival, Vinayagar Statue,
Vinayagar Statue Protection, Vinayaka Statue Insurance, Ganesh Chaturthi 2018 ,Vinayagar Chathurthi 2018,

மும்பை: மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில், இன்று கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி, விநாயகர் சிலைகள் மற்றும் சிலைகளுக்கு அணிவிக்கப்படும் நகைகளுக்கு, 600 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.

இதுகுறித்து, விநாயகர் சதுர்த்தி விழா அமைப்பாளர்கள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக, பிரமாண்ட விநாயகர் சிலைகள் செய்யப்படுகின்றன. விநாயகர் சிலைகளுக்கு, தங்க நகைகள் அணிவிக்கப்படும். இந்த பண்டிகையில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர்.

மும்பையின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு அமைப்புகளால் நிறுவப்படும் விநாயகர் சிலைகள், நகைகள் பாதுகாப்புக்காக, 600 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு உள்ளது. இதில், தனிநபர் விபத்துக்கான இன்சூரன்சும் அடங்கும். இந்த தொகை, கடந்தாண்டை விட, 20 சதவீதம் அதிகம்.

மும்பையில், விநாயகர் சதுர்த்தியை பெரியளவில் நடத்தும் அமைப்பாக, ஜி.எஸ்.பி., சேவா மண்டல் திகழ்கிறது. மும்பை, கிங்ஸ் சர்க்கிளில் செயல்படும் இந்த அமைப்பு, இந்தாண்டு, 265 கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் செய்துள்ளது.

ஜி.எஸ்.பி., சேவா மண்டல் உருவாக்கியுள்ள விநாயகர் சிலை, 90 கிலோ தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நகைகளை, வங்கி லாக்கரில் இருந்து எடுக்கும் நேரம் முதல், மீண்டும் லாக்கரில் வைக்கும் வரை, இன்சூரன்ஸ் பாலிசி அமலில் இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-செப்-201812:55:52 IST Report Abuse
Loganathan Kuttuva மும்பை போன்று புனேயிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. லோகமான்ய திலகர் இதற்காக நல்ல முயற்சி எடுத்தார்.
Rate this:
Share this comment
Cancel
Shanu - Mumbai ,இந்தியா
13-செப்-201809:01:59 IST Report Abuse
Shanu In India , there is no security for girl child
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201807:53:21 IST Report Abuse
Srinivasan Kannaiya விநாயகர் மதிப்பே ரூ.600 கோடி தானா
Rate this:
Share this comment
Srinivasan N - Chennai,இந்தியா
13-செப்-201808:57:08 IST Report Abuse
Srinivasan Nநீங்கள் சொல்லும் விலை என்ன?...
Rate this:
Share this comment
Sudarsanr - Muscat,ஓமன்
13-செப்-201809:18:11 IST Report Abuse
Sudarsanrசெய்தியை நல்ல படிக்கவும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X