வழக்கறிஞரை வெட்டிய ஆறு பேர் கைது| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வழக்கறிஞரை வெட்டிய ஆறு பேர் கைது

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் கடந்த வாரம் வழக்கறிஞர் சிவகுமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம், பல்லவர்மேடு பகுதியில் வசித்து வரும் ராமசாமி மகன் சிவகுமார், 26. வழக்
கறிஞரான இவர், ரவுடி தணிகாவிற்கு உதவியாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த வாரம், மாலை நேரத்தில் அவர் அப்பா நடத்தி வரும் பால் கடையில் இருந்துள்ளார்.
அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல், சிவகுமாரை சரமாரியாக வெட்டிவிட்டு சென்றனர். அனைவரும் தலைகவசம் அணிந்திருந்தனர். சிவ காஞ்சி போலீசார் குற்றவாளிகளை தேடி
வந்தனர்.
இந்நிலையில், தாமல் பகுதியை சேர்ந்த மணிமாறன், துளசிராமன், முனியாண்டி, சிறுகாவேரிபாக்கம் பகுதியைசேர்ந்த அருண்குமார், செய்யார் பகுதியை சேர்ந்த இஸ்மாயில், மணிகண்டன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
தணிகாவுக்கும், தினேஷ் என்பவருக்கும் ஏற்கனவே பகை இருந்தது.சிவகுமார், தணிகாவிற்கு ஆதரவாக இருந்து வருவதால் இவரை கொலை செய்து விட்டால் தணிகா தனிமைபடுத்தப்படுவான் என, திட்டமிட்டனர்.
கடந்த வாரம், தந்தையின் கடையில், தனியாக இருப்பதை அறிந்து, தினேஷ் அடியாட்கள் கொலை செய்ய முயற்சி செய்தனர். அதில், அவர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X