iPhone XS, XS Max, XR launched with A12 Bionic chip, coming to India on September 28 | ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் அறிமுகம்| Dinamalar

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் அறிமுகம்

Added : செப் 13, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்கள் அறிமுகம்

கலிபோர்னியா:உலகின் முன்னணி மின்னணு சாதனங்கள் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் , புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி ஐபோன் 8 மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகிய ஸ்மார்ட் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்தாண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா கலிபோர்னியாவில் அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது. நவீன காலத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறை படைப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டன. இதன்படி நவீன தொழில்நுட்பத்துடன் வரும் 3 ஐபோன்களில் டூயல் சிம் பயன்படுத்திக் கொள்ளலாம். பட்ஜெட் ஐபோனாக கருதப்படும் ஐபோன் 10R ஒரே ஒரு பின்புற கேமராவுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4:
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மாடலில் முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய எஸ்4 சிப்செட், இ.சி.ஜி. பரிசோதனை செய்யும் வசதிகளை புதிய வாட்ச் கொண்டுள்ளது. புதிய வாட்ச் மாடலில் முற்றிலும் புதிய எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 30% பெரிது என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanu - Mumbai ,இந்தியா
13-செப்-201809:00:31 IST Report Abuse
Shanu Waiting to buy the new one
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
13-செப்-201808:56:42 IST Report Abuse
G.BABU இந்த ஆப்பிள் நிறுவனத்தின் இன்றைய பெறுமதி $ 1 Trillion . அடக்க விலையை விட பல மடங்கு லாபம் வைத்து விற்றாலும் அதை வாங்க வரிசை கட்டி நிற்கும் மக்கள் இருக்கும் வரை, இதன் பெறுமதி இன்னும் பல Trillion ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201807:49:43 IST Report Abuse
Srinivasan Kannaiya புதிய சமுக சீர்கேடுகளும் அறிமுகமாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X