தடையை மீறி போதை பொருட்கள் பதுக்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி போதை பொருட்கள் பதுக்கல்

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த குடோனை அதிகாரிகள் கண்டறிந்து, பொருட்களை கைப்பற்றினர்.பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில், கூட்ெஷட் ரோட்டில் உள்ள குடோன் ஒன்றில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வபாண்டியன், சிவானந்தம் மற்றும் விஜயராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.அங்கு, தடை செய்யப்பட்ட, 100 கிலோவுக்கும் அதிகமான குட்கா, பான்மசாலா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த சாதிக், 45 என்பவர் அந்த குடோனை வாடகைக்கு எடுத்து, போதை பொருட்களை பதுக்கி வைத்து கடைகளுக்கு விற்பனை செய்துள்ளார்.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறுகையில், 'பொருட்களை பரிசோதனை கூடத்தில் ஆய்வுக்கு உட்படுத்துவோம். அவை அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் என்பது ஆய்வு அறிக்கையில் உறுதியானால், சம்மந்தப்பட்ட நபருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் இரண்டும் விதிக்க உணவு பாதுகாப்பு சட்டத்தில் இடம் உள்ளது,' என்றனர்.
மாணவர்களுக்கு குறி!அதிகாரிகள் நடத்திய சோதனையில், புகையிலையில் மென்த்தால் கலந்து, கரையக்கூடிய தாளில் மடித்து வைக்கப்பட்டிருக்கும் 'கூல் லிப்' எனும் போதைப் பொருள், ரகசிய குடோனில் அதிகளவில் கைப்பற்றப்பட்டது. தடை செய்யப்பட்ட 'கூல் லிப்' போதைப் பொருளுக்கு, பொள்ளாச்சி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகம் அடிமையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்களை குறிவைக்கும், குட்கா உள்ளிட்ட போதை பொருள் வியபாரிகள் மீது, போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X