தொல்காப்பியர் அரங்கம்: பொறியாளர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொல்காப்பியர் அரங்கம்: பொறியாளர் ஆய்வு

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெண்ணாடம்:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் பெண்ணாடம் பேரூராட்சி தொல்காப்பியர் அரங்கத்தை பேரூராட்சிகளின் உதவி பொறியாளர் ராஜா ஆய்வு செய்தார்.
பெண்ணாடம் பேரூராட்சியில் கடந்த 2006ம் ஆண்டில் தமிழ்நாடு நகர்புற வளர்ச்சி மேம்பாட்டு நிதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் தொல்காப்பியர் அரங்கம் கட்டப்பட்டது. இதன் மூலம் சுற்றியுள்ள திருமலை அகரம், நந்திமங்கலம், வடகரை, பெ.பொன்னேரி, இறையூர், அரியலுார் மாவட்ட கிராமங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருமணம், காதணி விழா மற்றும் அரசியல் கட்சியினர் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வந்தனர். இதற்காக கணிசமான தொகை வாடகையாக வசூலிக்கப்பட்டு வந்தது.
நாளடைவில் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்ட தொல்காப்பியர் அரங்கத்தின் சுவர்கள் மற்றும் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது. இதனால், கடந்தாண்டு அரங்கம் மூடப்பட்டது.இதனை சுட்டிக்காட்டி, கடந்த 10ம் தேதி 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, நேற்று, பேரூராட்சிகளின் உதவி பொறியாளர் ராஜா, தொல்காப்பியர் அரங்கத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அரங்கம் புனரமைப்பதற்கான பதிவேடுகளை தயார் செய்து, விரைவில் புனரமைப்பு பணியை துவக்க செயல் அலுவலரிடம் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X