ஜெயந்தி உற்சவம் நிறைவு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜெயந்தி உற்சவம் நிறைவு

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உடுமலை:உடுமலை, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், ஜெயந்தி உற்சவ நிறைவு சிறப்பு பூஜை நேற்று நடந்தது.உடுமலை, பெரியகடை வீதி, நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவத்தையொட்டி சிறப்பு விழா, கடந்த 3ம்தேதி முதல் நடந்தது. நாள்தோறும், கிருஷ்ணனின் பிறப்பு முதல் அனைத்து அவதாரங்களும், சிறப்பு அலங்காரமாக அலங்கரிக்கப்பட்டு, பூஜைகள் நடந்தது. உற்சவத்தின் நிறைவாக, நேற்று, பூமீநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளுக்கு, திருக்கல்யாண வைபவம் நடந்தது.வாரணமாயிரம் பாசுரங்கள் சேவையுடன் உற்சவம் நிறைவு பெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பூமீநீளா நாயகி சமேத சீனிவாச பெருமாளை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X