விநாயகர் சதுர்த்திக்காக தயாராகிறது 70 கிலோ 'முக்குருணி' கொழுக்கட்டை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விநாயகர் சதுர்த்திக்காக தயாராகிறது 70 கிலோ 'முக்குருணி' கொழுக்கட்டை

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை ரயில்வே காலனி சித்தி விநாயக செல்வ முத்துகுமார சுவாமி கோயிலின், சடகோப ராமானுஜ ஐயப்ப பக்தர்கள் குழுவினர் விநாயகர் சதுர்த்திக்காக 70 கிலோ 'முக்குருணி' கொழுக்கட்டை தயார் செய்கின்றனர்.கோயில் நிர்வாகி பாலாஜி சாமி கூறியதாவது: 18 படி அரிசி, வெல்லம், தேங்காய், நெய், 180 ஏலக்காய் கலந்து தயாராகும். இந்த கொழுக்கட்டையின் எடை 70 கிலோ. அரிசியின் அளவை 'குருணி' என்ற அளவையில் (ஒரு குருணி-6 படி) அளப்பதால் இதற்கு 'முக்குறுணி கொழுக்கட்டை' என்ற பெயர் வந்தது. 'மெகா' உருண்டையாக உருட்டிய மாவை துணியில் வைத்து, பனை ஓலை சுற்றி, நீர் நிரப்பிய பெரிய பாத்திரத்தில் வைத்து விறகு அடுப்பில் வைக்கிறோம். கொழுக்கட்டை நேற்று காலை 11:00 மணி முதல் இன்று மாலை 6:00 மணி வரை வேகும். இதை 18 பேர் கொண்ட பக்தர்கள் குழு 32 மணி நேரம் கண்காணித்து, பக்குவமாய் வெளியே எடுப்பர். கொழுக்கட்டையை கம்பில் கட்டி சுமந்து வந்து விநாயகருக்கு படையல் வைத்து பக்தர்களுக்கு வழங்குவோம். இதை தொடர்ந்து செப்., 14 காலை 9:00 மணிக்கு சித்தி தேவிக்கும், விநாயகருக்கும், திருக்கல்யாண விழாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும். இவ்வாறு கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X