தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீ விபத்தில் பாதித்தவர்களுக்கு எம்.எல்.ஏ., நிவாரண உதவி

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கண்டமங்கலம்:தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவிகளை எம்.எல்.ஏ., வழங்கினார்.
கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம், புளியந்தோப்பு வீதியை சேர்ந்தவர் காளிதாஸ்,30; சலவைத்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது குடும்பத்துடன், திண்டிவனத்தில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இந்நிலையில் அன்று இரவு அவரது வீடு மின் கசிவு காரணமாக தீ பிடித்து எரிந்தது. வீட்டில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ பக்கத்தில் இருந்த பாப்பாத்தி வீட்டிற்கும் பரவியது. அதில் இரு வீடுகளும் எரிந்து சாம்பலானது.
தகவலறிந்த சக்கரபாணி எம்.எல்.ஏ., நேரில் சென்று தீவிபத்தால் பாதித்த இரு குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி, அரசு சார்பில் தலா 5 ஆயிரம் மற்றும் 10 கிலோ அரிசியும், தனது சொந்த செலவில் தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் வேட்டி சேலை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அ.தி.மு.க., ஒன்றிய செயலர் ராமதாஸ், முன்னாள் ஒன்றிய செயலர் கண்ணன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X