எலி புழுக்கை கலந்த உப்பு, பூச்சி அரித்த பயறு, வாசமில்லா டீ!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எலி புழுக்கை கலந்த உப்பு, பூச்சி அரித்த பயறு, வாசமில்லா டீ!

Added : செப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோவை:கோவையிலுள்ள ரேஷன் கடைகளில், வழங்கல் துறை அறிவுறுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்கள் தவிர, பிற பொருட்களை விற்பனை செய்ய, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.கோவை மாவட்டத்தில், 10 லட்சத்து, 85 ஆயிரத்து, 487 ரேஷன்கார்டுகள் புழக்கத்திலுள்ளன. ரேஷன் கடைகளின் வாயிலாக பச்சரிசி, புழுங்கல் அரிசி, சர்க்கரை, கோதுமை, மைதா, பாமாயில், துவரை, உளுந்து, கெரசின் ஆகியவை வழங்கப்படுகின்றன.தீபாவளி மற்றும் பொங்கலுக்கு, கூடுதல் சர்க்கரை வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை வழங்கும் போது, அவற்றோடு சேர்த்து, ஷாம்பூ, டீத்துாள், காபித்துாள், உப்பு, தேங்காய் எண்ணெய், தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை, ரேஷன்கடை பணி யாளர்கள் விற்பனை செய்கின்றனர். இதற்கு கூடுதல் விலையையும் பெற்றுக்கொள்கின்றனர்.இதை வாங்க மறுத்தால், வழக்கமான ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்று, கடைக்காரர் கூறுவதால் தகராறு ஏற்படுகிறது.ரேஷன்கார்டுதாரர்கள் சிலர் கூறியதாவது:ஒவ்வொரு மாதமும் அத்தியாவசியப்பொருட்களோடு, டயர் வாசம் உமிழும் டீத்துாளை வாங்க வற்புறுத்துகின்றனர், எலியின் கழிவுகள் கலந்த, பேக்கிங் உடைந்த உப்பு, நமுத்துப்போன தீப்பெட்டி, தரமற்ற ஷாம்பூ, புளி, அரிசி, பூச்சி அரித்த பயறு வகைகள் போன்ற பொருட்களை வாங்கச்சொல்லி வற்புறுத்துகின்றனர். இப்பொருட்களை விற்பனை செய்யும், ரேஷன் கடைக்காரர் மீதும் சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கம் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
'தரமற்ற பொருட்கள்விற்பனைக்கு தடை' மாவட்ட வழங்கல் அலுவலர், ஜெயராணியிடம் கேட்டதற்கு, ''தரமற்ற, காலாவதியான பொருட்களை கார்டுதாரர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற விற்பனைக்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கூட்டுறவு சங்கங்களின் கீழ் செயல்படும், ரேஷன்கடைகளில் மட்டுமே இப்பிரச்னை நிலவுகிறது. இது குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் பேசியிருக்கிறோம். விரைவில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X