PM Announces Swachhata hi Seva Movement From Sept 15, Calls it Befitting Tribute to Bapu | புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதிய தூய்மை திட்டம் - பிரதமர் மோடி அறிவிப்பு

Updated : செப் 13, 2018 | Added : செப் 13, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
புதிய தூய்மை திட்டம்  - பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடில்லி: கடந்த 2014-ம் ஆண்டு காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2-ம் தேதி 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்நிலையில்புதிய தூய்மை திட்டத்தை மத்திய அரசு துவக்க திட்டமிட்டு உள்ளது. 'தூய்மையே உண்மையான சேவை' என்ற பெயரில் பிரதமர் மோடி வருகிற 15-ம் தேதி துவங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-காந்தி பிறந்த 150-வது ஆண்டு விழா 2019-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முன்பாக வரும் 15-ம் தேதி தூய்மையே உண்மையான சேவை என்ற திட்டத்தை நாம் துவங்குகிறோம். அன்றைய தினம், தூய்மை இந்தியா திட்டத்தில் அயராது உழைத்து வரும் தொண்டர்களுடன் கலந்துரையாடுவதை நான் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன்.இந்த திட்டத்தில் இணைந்து தூய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இது தேசதந்தைக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
14-செப்-201803:34:32 IST Report Abuse
Aarkay அய்யய்யோ இன்னுமொரு 1% அரசு ஊழியர் சம்பளத்திலிருந்து cess என்ற பெயரில், ஆட்டைய போடுவதற்கா மற்றொரு தூய்மை திட்டம்? நடைமுறைப்படுத்தப்படாத வெறும் அறிவிப்புகளால், எள்ளளவும் பயனில்லை. ஸ்வச் பாரத் இருக்கும்போதே, மாநில தலைநகர சாலைகள் நாறிக்கிடக்கின்றன.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
13-செப்-201822:01:42 IST Report Abuse
Viswanathan நாங்கள் , ஏற்கனவே , கூவம் சீரமைப்பு திட்டம் , விழி இழந்தோர்க்கு ஒளி வழங்கும் திட்டம் , விதவா மறுமண திட்டம் , பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டம் , இருபது அம்ச திட்டம் ஆகியவற்றை பார்த்து விட்டோம்
Rate this:
Share this comment
Cancel
ஆலயம்.எஸ்.ராஜா ஹிந்துஸ்தானத்தின் சேவகன் மாநில அரசுகளுக்கும் பெட்ரோல் - டீசலில் இருந்து கிடைக்கும் வரிதான் கணிசமான வருவாய். இதை இழக்க எந்தவொரு அரசும் தயாராக இருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X