சொத்து வைத்திருப்போரில் பிரான்சை முந்தும் இந்தியா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சொத்து வைத்திருப்போரில் பிரான்சை முந்தும் இந்தியா

Added : செப் 13, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சொத்து வைத்திருப்போரில் பிரான்சை முந்தும் இந்தியா

புதுடில்லி 'வரும், 2022ல், பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் நாடுகளை விட, இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்போர் அதிகமாக இருப்பர்' என, சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.'நைட் பிராங்க்' என்ற நிறுவனம், உலகளவில் பணக்காரர்கள் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, 2017ல், இந்தியாவில், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமாக சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 200 ஆக இருந்தது;இது, 2022ம் ஆண்டில், 340 ஆக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த, 2017ல், பிரான்சில், 230, ரஷ்யா, பிரிட்டனில், தலா, 220 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு கூடுதலான சொத்து மதிப்புள்ள பணக்காரர்களாக திகழ்ந்தனர்.இந்த எண்ணிக்கை, 2022ல், பிரான்சில், 310, ரஷ்யாவில், 270, பிரிட்டனில், 260 ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வலிமையான பொருளாதார வளர்ச்சி, சொத்து மதிப்பு உயர்வு ஆகியவை, உலக பணக்காரர்களின் எண்ணிக்கை உயர காரணமாக உள்ளன.இவற்றால், 2022ல், உலகம் முழுவதும், 9,570 பேர், 3,600 கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்து உடையோராக இருப்பர் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த, 2017ல், 3,600 கோடி சொத்துள்ள பணக்காரர்கள் எண்ணிக்கை, 6,900 ஆக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishnan - Chennai,இந்தியா
13-செப்-201808:50:28 IST Report Abuse
krishnan ஏழைகள் இருக்கும் நாடுகளில் நம் முதல் இடத்தில இருப்போம்
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
13-செப்-201808:04:48 IST Report Abuse
சீனி பிரான்சில், பெரும் பணக்காரர்களுக்கு அளவுக்கு மீறி உள்ள சொத்துக்களுக்கு பெரும் வரியும் உண்டு. எனவே அவர்களும் வேறு நாட்டுக்கு சென்று முதலிடு செய்கின்றனர். ரஷியா கம்ன்யூனிஸ்டு நாடு, அளவுக்கு மீறினால், ஆட்சியாளர்க்கு ஆதரவாக இல்லை எனில் ஜெயில் உறுதி. நம்ம ஊரில் சொத்து ஜாஸ்தி ஆன பிறகு பாதுகாக்க ஜெட்லி, ஜெத்மாலனி, அமித்ஷா, அனில் அம்பானி, மல்லையா, மாறன் போன்றவர்கள் எம்.பி ஆகி இலவச விமானத்தில் பறந்து பறந்து முதலிடு செய்கின்றனர்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-செப்-201807:47:26 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு காலத்தில் உலகத்திலேயே முதலாவதாக இருக்கும்... அதுவும் எல்லா சொத்துக்களும் அரசியல்வாதிகளிடம் இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X