மல்லையா சந்திப்பை மறைத்தது ஏன்?: ராகுல் கேள்வி Dinamalar
பதிவு செய்த நாள் :
மல்லையா சந்திப்பை மறைத்தது ஏன்?
ராகுல் கேள்வி

புதுடில்லி : ''பொருளாதார குற்றவாளியான விஜய் மல்லையா, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வது குறித்து கூறியும், அதை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறைக்கு, நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவிக்காதது ஏன்,'' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

Congress,Rahul,Rahul Gandhi,Vijay Mallya,காங்கிரஸ்,மல்லையா,ராகுல்,ராகுல் காந்தி,விஜய் மல்லையா


வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றியதாக, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, பல்வேறு வங்கிகள் வழக்கு தொடர்ந்தன.

விசாரணை :


அதைத் தொடர்ந்து, 2016 மார்ச்சில், இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கியுள்ளார். அவரை, நாடு கடத்துவதற்காக, லண்டன் நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைக்காக, லண்டன் நீதிமன்றத்துக்கு நேற்று முன்தினம் வந்த

மல்லையா, 'நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன், வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவதில் சமரசம் செய்வது குறித்து, நிதி அமைச்சரை சந்தித்து பேசினேன்' என, கூறினார். ஆனால் இதை, மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலவருமான, அருண் ஜெட்லி மறுத்து உள்ளார்.

'என்னை சந்தித்து பேசியதாக மல்லையா கூறியது பொய். பார்லிமென்டில் இருந்தபோது, சமாதானம் செய்வதற்கு தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், வங்கிகளிடம் பேசும்படி கூறிவிட்டேன்' என, ஜெட்லி கூறியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், டில்லியில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: அருண் ஜெட்லி பொய் சொல்கிறார். பொருளாதார குற்றவாளியான மல்லையா, தான் லண்டனுக்கு செல்ல உள்ளதாக, மத்திய நிதி அமைச்சரிடம் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து, வழக்குகளை விசாரித்து வரும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு, ஜெட்லி, ஏன் எந்தத் தகவலும் அளிக்கவில்லை?

மல்லையா லண்டன் தப்பிச் செல்வதற்கு வசதியாக, இந்தத் தகவலை அவர் மூடி மறைத்தாரா அல்லது அவருக்கு மேல் உள்ள யாராவது, இந்த உத்தரவை ஜெட்லிக்கு பிறப்பித்துள்ளனரா? இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

பேட்டி :


காங்கிரஸ், எம்.பி.,யான, பி.எல்.புனியா கூறியதாவது: பார்லிமென்ட் வளாகத்தில், ஜெட்லியும், மல்லையாவும் பேசியதை, நான் பார்த்தேன். இது குறித்து, அப்போதே, நான் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தேன். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். ஆனால், மல்லையாவுடன் எதுவும் பேசவில்லை என ஜெட்லி கூறியுள்ளார்; அது, முழுக்க முழுக்க பொய். இவ்வாறு அவர் கூறினார்.

துாண்டிவிடுகிறாரா ராகுல்?

இந்த சர்ச்சை குறித்து, மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல், கடந்த மாதம், பிரிட்டனுக்குச் சென்றார். அதன் பின், தற்போது, ஒரு பொய்யான குற்றச்சாட்டை ல்லையா கூறியுள்ளார். மல்லையா இவ்வாறு திடீரென பொய் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு பின்னணியில், ராகுலின் பயணம் அமைந்ததா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (30+ 163)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Pillai - Port Harcourt,இந்தியா
14-செப்-201821:50:06 IST Report Abuse

Thulasingam Pillaiநியாயமான கேள்வி, பதில் கூற நேர்மை இருக்கிறதா இந்த கேடியின் டீமுக்கு?

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
14-செப்-201820:17:49 IST Report Abuse

r.sundaramஏன் இன்னும் பிஜேபி குவட்ரோச்சி தப்பிப்போனதை எப்படி என்னா என்று கேட்கவில்லை, தப்பு செய்தவர் வெளிநாடு சென்று தப்பிக்கலாம் என்று முதலில் நிரூபித்தது குவட்ரோச்சி தான், அதற்க்கு உடந்தையாக இருந்ததும் இதே காங்கிரஸ் கட்சியும் அந்த இத்தாலி அம்மாவும்தான்.

Rate this:
14-செப்-201815:17:13 IST Report Abuse

அண்ணாமலை ஜெயராமன்சீன தூதரை வரவழைத்து ரகசிய கூட்டம் போடுகிறாய் , லண்டன் சென்று மல்லையாவை சந்திக்கிறாய் இதையெல்லாம் ஏன் மறைகிறாய் உண்மையை சொல்லுங்க .

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X