'என் ஓட்டுச்சாவடி வலிமை மிக்கது' Dinamalar
பதிவு செய்த நாள் :
'என் ஓட்டுச்சாவடி வலிமை மிக்கது'

புதுடில்லி : ''லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில், பா.ஜ., மாபெரும் வெற்றி பெற, 'என் ஓட்டுச் சாவடி, வலிமை மிக்கது' என்ற வாசகத்தை, தொண்டர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

என் ஓட்டுச்சாவடி,வலிமை மிக்கது,பிரதமர்,மோடி


நல்லுறவு :


பிரதமர் நரேந்திர மோடி, 'நமோ மொபைல்' செயலி வாயிலாக, பா.ஜ., தொண்டர்களுக்கு ஆற்றிய உரை: பா.ஜ.,வின் மிகப் பெரிய பலமே, அதன் தொண்டர்கள் தான். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், வரலாறு காணாத வெற்றியை, பா.ஜ., பெறப் போவதை,

தொண்டர்களின் நான்காண்டு கால அயராத உழைப்பே உறுதி செய்துள்ளது.

தொண்டர்கள் அனைவரும், அவர்களது தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுடன், தொடர்ந்து பேசி, நல்லுறவை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், நம் தொண்டர்களுடன், 20 குடும்பங்களும், இளைஞர்களும் இணைந்து பணியாற்றும்படி, உறவை பலப்படுத்துங்கள்.

'என் ஓட்டுச்சாவடி, வலிமை மிக்கது' என்ற வாசகத்தை, தொண்டர்கள் அனைவரும் பின்பற்றி, கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டும்.

கடின உழைப்பு

:
பா.ஜ.,வுக்கு, 2014ல் வீசியதை விட, ஆதரவான காற்று, தற்போது பலமாக வீச துவங்கி உள்ளது. அதில் அடித்து செல்லப்படுவோமோ என பயந்து தான், எதிர்க்கட்சிகள், ஒன்றோடு ஒன்று, கைகோர்க்க துவங்கி உள்ளன.

Advertisement

பா.ஜ.,வில் மட்டும் தான், சாதாரண தொண்டன் கூட, தலைவனாக முடியும். இன்று நான் அமர்ந்துள்ள இடத்தில், நாளை வேறு ஒரு தொண்டன் வந்து அமர முடியும். ஆனால், காங்.,கில், இது சாத்தியமே இல்லை.

அர்ப்பணிப்பு உணர்வுடன், தியாகங்கள் செய்யும் சில, காங்., தொண்டர்களை பார்த்தால் எனக்கு பரிதாபமாக இருக்கிறது. அவர்கள், ஒரே ஒரு குடும்பத்தின் நன்மைக்காக, இவ்வளவு கடினமாக உழைக்கின்றனர். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-செப்-201822:34:05 IST Report Abuse

kulandhaiKannanதல! உங்களை யாரும் அசைக்க முடியாது

Rate this:
ஏழை தாயின் மகன் - coimbatore,இந்தியா
14-செப்-201822:01:45 IST Report Abuse

ஏழை தாயின் மகன் நீ என்ன சொன்னாலும் எங்களுக்கு சாமி அருள் வாக்கு கொடுத்த கணக்குத்தான்யா..எங்களை விட்டிட்டு அய்யா ஓரமா காஞ்சி கூழை குடிச்சிட்டு இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிடுறோம். இது பணக்கார நாடுதான்ய, தெரியாம நாங்க ஏழையா பொறந்து தொலைச்சிட்டோம். உங்களுக்கு அருவெறுப்ப இருந்த சொல்லிடு அய்யா, நான் எங்கேயாவது பொய் கண்ணுல படாம உயிர் வாழ்த்துகிறோம்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-செப்-201821:34:04 IST Report Abuse

Pugazh Vஇத்தாலி இத்தாலி என்று தமிழக த்தில் மட்டுமே சில பீஜேபீ ஆதரவாளர்கள் என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள். இத்தாலி அரசாங்கமோ அல்லது இத்தாலி ஊடகங்களோ ஏன் சாதாரண இத்தாலி குடிமகன் கள் கூட சோனியா/ ராகுல் பற்றி பேசுவதில்லை. ஏன் பலருக்கு தெரியக்கூட தெரியாது. சும்மா சும்மா இத்தாலி/ அரபி/ வாடிகன்/ என்று புலம்புவதில் என்ன அல்ப சந்தோஷமோ. அ.ஜெ.ராமன் கூட, ஒருமையில் அநாகரிக அவமரியாதையாக எழுத ஆரம்பித்து விட்டது அதிர்ச்சி. வலுவான விளக்கங்கள் எதிர் வாதங்கள் எதுவுமே பீஜேபீ யிடம் இல்லை. மதம், இனம், மொழி, ஜாதி இவற்றை முன் வைத்து தான் வரும் தேர்தலில் கலாட்டா பண்ண வேண்டியிருக்கிறது

Rate this:
மேலும் 36 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X