பழனிசாமி, பன்னீருக்கு டில்லி ஐகோர்ட், 'நோட்டீஸ்' Dinamalar
பதிவு செய்த நாள் :
பழனிசாமி, பன்னீருக்கு
டில்லி ஐகோர்ட், 'நோட்டீஸ்'

அ.தி.மு.க., சட்ட விதிகளில் மாற்றம் செய்ததை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது.

ADMK,Delhi,Panneerselvam,அ.தி.மு.க,டில்லி,பன்னீர்செல்வம்


அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த, ஜெயலலிதா மறைந்த பின், கட்சி இரு அணிகளாக பிளவுபட்டது. பின், இரு அணிகளும் இணைந்தன. இதையடுத்து, 2017 செப்., 12ல், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதில், பொதுச்செயலர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.

இதற்கேற்ப, கட்சி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச்செயலர், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதியிலும், திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து, அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., - கே.சி.பழனிசாமி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிக்கும் பொறுப்பை, தலைமை தேர்தல் கமிஷனுக்கு மாற்றியது.

இதை எதிர்த்து, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர், டில்லி உயர் நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.

இம்மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அதை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 'அ.தி.மு.க., விதிகளில் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, சசிகலா உட்பட, அனைத்து தரப்பினரும், மூன்று வாரத்திற்குள், தங்கள் விளக்கத்தை, தேர்தல் கமிஷனிடம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

Advertisement

'அதன் பின், அடுத்த நான்கு வாரத்திற்குள், தேர்தல் கமிஷன், அதை விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்' என்றும், கெடு விதிக்கப்பட்டுள்ளது. இது, பன்னீர், பழனி தரப்பினருக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, வழக்கு தொடர்ந்த, கே.சி.பழனிசாமி கூறியதாவது: கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால், பொதுச்செயலர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதே, தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. அதை நிறைவேற்றவே, வழக்கு தொடர்ந்தேன். தற்போதைய நீதிமன்ற உத்தரவின்படி, ஏழு வாரத்திற்குள், தீர்வு கிடைத்து விடும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AXN PRABHU - Chennai ,இந்தியா
14-செப்-201823:35:10 IST Report Abuse

AXN PRABHUகட்டுக்கடங்காத அறிவியல் ஞானம் கொண்டு , 1976 இல் இருந்து அதிமுக கட்சி விதிகளை மாற்றி அமைத்த வில்லேஜ் விஞ்ஞானிகளை பாராட்டாமல் ,பக்கிகள் கேள்வி கேட்கிறார்களே ??? என்னடா இது ??? இந்த தமிழ நாட்டுக்கு வந்த சோதனை. ???

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-செப்-201821:37:22 IST Report Abuse

Pugazh Vஉங்கள் தலைவி ஜெ ஜெ வே சசி குடும்பத்தின் கொத்தடிமை யாகத் தானே கடந்த பல ஆண்டுகளாக இருந்திருக்கிறார்? இந்த செய்தி க்கு சம்பந்தமே இல்லாத திமுகவை இழுத்து எழுத என்ன அவசியம்? பிரச்சினையை திசை திருப்பறாராம்.

Rate this:
C.Elumalai - Chennai,இந்தியா
14-செப்-201812:08:50 IST Report Abuse

C.Elumalaiஅதிமுகவில் தலைமை ரத்த உறவு, வாரிசுகள் இல்லை, அதனால் தேக்கம். திமுக வில் வாரிசுகள் நிறையபேர்கள், ஆதரிக்கும், குடும்ப கொத்தடிமைகள், ஆமாம் சாமி போடுவார்கள். கடைசிவரை பதவி, எட்டா கனியாகவேஇருக்கும். தொண்டர்களுக்கு.அதிமுகவில் அப்படியில்லை,கடை கோடி தொண்டனுக்கும், பதவி தேடிவரும். பழனிச்சாமி,பன்னீர்செல்வம், முதல்வர் துணை முதல்வர், இருவரும் தலமை ரத்தவாரிசுகள் இல்லை. இதுகுடும்ப கொத்தடிமைகளுக்கு, தெரியாது.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X