எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவா? Dinamalar
பதிவு செய்த நாள் :
எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவா?

லக்னோ : பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக, முந்தைய காங்கிரஸ் அரசையும் குறை கூறி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசியுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்க்கட்சி,கூட்டணி,பிளவா?,பகுஜன் சமாஜ்,மாயாவதி,காங்கிரஸ்


லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மிகப் பெரிய கூட்டணியை, காங்கிரஸ் உருவாக்கி வருகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் சமீபத்தில், 'பாரத் பந்த்'

நடத்தப்பட்டது. இதில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கவில்லை.

இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கருத்து கூறிய மாயாவதி, இந்த விலை உயர்வுக்கு, முந்தைய காங்கிரஸ் அரசும் காரணம் என்றார். அவரது இந்தப் பேச்சு, காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்து, பகுஜன் சமாஜ் கட்சி விலகுகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பாரத் பந்த்தில் பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் ஆட்சியும் காரணம் என, மாயாவதி கூறியுள்ளார்.

Advertisement

இது மாயாவதியின் அரசியல் மற்றும் தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலில், அதிக தொகுதி களைப் பெறுவதற்காக, அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.

இருந்தாலும், எதிர்க்கட்சிகள் இடையேயான ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. இது குறித்து, காங்கிரஸ் தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravindran Nair - Ahmedabad,இந்தியா
14-செப்-201818:07:44 IST Report Abuse

Ravindran Nairசிவசேனா இல்லாமல் மஹாராஷ்டிராவில் சமீப காலமாக நடந்த எல்லா எலெக்ஷனிலும் பிஜேபி தனியாக வென்று உள்ளது நண்பரே.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-செப்-201817:30:34 IST Report Abuse

இந்தியன் kumarஎல்லாம் ஒரு தேர்தல் கணக்கு தான் மிரட்டினால் தானே சீட் அதிகமாக பெற முடியும்.

Rate this:
anand - Chennai,இந்தியா
14-செப்-201817:21:38 IST Report Abuse

anandஉண்மையை சொன்னால் காங்கிரஸுக்கு கோபம் வருகிறது.. ஆறு ஆண்டுகளில் 34 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்து இவர்கிறார் மன்மோகன், சிதம்பரம்,.,.ஏன் இந்த அவசரம்?

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X