நீண்ட தூரம் செல்லும் விமான சேவை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நீண்ட தூரம் செல்லும் விமான சேவை

Added : செப் 13, 2018 | கருத்துகள் (2)
Advertisement
நீண்ட துாரம்,விமான சேவை

உலகில் நீண்ட துாரம் செல்லும் பயணிகள் விமான சேவை அக்., 11ல் துவக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு விமான சேவையை அக்., 11 முதல் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தொடங்குகிறது. இது 16,700 கி.மீ., துாரம் இடைநில்லாமல் செல்லும். பயண நேரம் 16 மணி நேரம் 45 நிமிடம். இதையடுத்து உலகின் நீண்ட துாரம் செல்லும் விமானம் என்ற பெருமையை பெறுகிறது.

ஏற்கனவே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 'ஏ340-500' என்ற விமானத்தை 100 பயணிகளுடன் சிங்கப்பூர் டூ நியூயார்க் வரை இயக்கி வந்தது. ஆனால் எரிபொருள் விலை உயர்வு காரணமாக 2013ல் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது நீண்டதுார விமானமாக தோகா டூ ஆக்லாந்து வரை 14,525 கி.மீ. செல்லும் கத்தார் ஏர்வேய்ஸ் உள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்சின் 'ஏர்பஸ் A350-900ULR' என்ற இந்த விமானம் 'அல்ட்ரா லாங் ரேஞ்ச்' வகையை சேர்ந்தது. இது 18 ஆயிரம் கி.மீ., தொடர்ந்து பறக்கும் திறன் பெற்றது. மேலும் 2,800 கி.மீ., கூடுதலாகவும் இயக்க முடியும். இதில் 161 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற விமானங்களை விட 92 இருக்கைகள் குறைவு.

மேலும் இருக்கைகள் அனைத்தும் பிரீமியம் எகனாமி மற்றும் பிசினஸ் கிளாஸ் வகையை சேர்ந்தவை. இதில் எகனாமி இருக்கைகள் கிடையாது. அக்., 11 முதல், வாரத்தில் மூன்று நாட்கள் விமான சேவை நடக்கும். அக்., 18ல் இருந்து தினசரி சேவையாக மாற்றப்படும். தவிர சிங்கப்பூர் - லாஸ் ஏஞ்சல்ஸ் இடையே விமான சேவை தொடங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


எடை :

கார்பன் பைபரால் விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் எடை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் குறைவாகவே தேவைப்படும்.


எரிபொருள் :

மற்ற விமானங்களை விட இதில் உள்ள எரிபொருள் டேங்க்கில் 17 ஆயிரம் லிட்டர் கூடுதலாக நிரப்பலாம்.

விமானத்தின் நீளம் : 220 அடி

மணிக்கு வேகம் : 900 கி.மீ.,

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Sundaramurthy - Chennai,இந்தியா
19-செப்-201810:39:29 IST Report Abuse
P Sundaramurthy எகானாமி அல்லாத வகுப்புகள் அனைத்தும் படுக்கைவசதியுடன்தான் இருக்கும் . அதனால்தான் இதில் எக்கனாமி வகுப்பு கிடையாது .
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201808:52:49 IST Report Abuse
Srinivasan Kannaiya உக்காந்து இருப்பது மிகவும் கஷ்டம்...இருக்கைகள் படுக்கை அமைப்பில் இருந்தால் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X