ரேஷனில் ஆய்வு அமைச்சர் அறிவுரை| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் ஆய்வு அமைச்சர் அறிவுரை

Added : செப் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''ரேஷன் கடைகளில், அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, அத்தியாவசிய பொருட்கள், அனைவருக்கும் வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை, உறுதி செய்ய வேண்டும்,'' என, உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
பொது வினியோக திட்ட செயல்பாடு தொடர்பாக, சென்னை, சேப்பாக்கம், எழிலகத்தில், உணவு வழங்கல் துறை மாவட்ட அதிகாரிகளுடன், அமைச்சர் காமராஜ், நேற்று முன்தினம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:
தமிழகத்தில், 1.97 கோடி குடும்பங்களுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. நடப்பு பருவத்தில், 1,447 நேரடி நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக, 14.32 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்
கருதி, நெல் கொள்முதல் நிலையங்கள், இம்மாதமும் தொடர்ந்து செயல்பட, மத்திய
அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. மாவட்ட வழங்கல் அதிகாரிகள், ரேஷன் கடைகளில், திடீர் ஆய்வு செய்து, அத்தியாவசிய பொருட்கள், அனைவருக்கும் வினியோகம் செய்யப்படுகிறதா என்பதை, உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
14-செப்-201814:34:13 IST Report Abuse
நக்கீரன் கண்காணித்து என்ன செய்ய வேண்டும்? கட்டிங்கை நீங்கள் கேட்கிறீர்களே?
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-செப்-201808:47:45 IST Report Abuse
Srinivasan Kannaiya அரசு அதிகாரிகள் மாதிரி தான் அந்த பகுதி பழைய கவுன்சிலர்கள் கட்சிக்காரர்கள் இருக்கிறார்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X