கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா...கோலாகலம்! வேண்டிய வரம் அருளிய வேழமுகன்| Dinamalar

தமிழ்நாடு

கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா...கோலாகலம்! வேண்டிய வரம் அருளிய வேழமுகன்

Added : செப் 14, 2018
Advertisement
 கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா...கோலாகலம்! வேண்டிய வரம் அருளிய வேழமுகன்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டம்முழுவதும் கோவில்களிலும், இந்து இயக்கங்கள் சார்பிலும், விநாயகர் சதுர்த்தி விழா, பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.மூலப்பரம்பொருளாகிய விநாயகர் சதுர்த்தி, திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுப்பகுதிகளில் உள்ள, விநாயகர் கோவில்களில், அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகளுடன் நடந்தது. அருகம்புல், மலர் மாலைகள், வெள்ளெருக்கு மாலை அணிவித்து, சிறப்பு அலங்கார பூஜையும், அகவல் வழிபாடும் நடந்தது.
ஆண்டிபாளையம் நவகிரஹ ரத்ன விநாயகர் கோவிலில், அதிகாலையில், 16 வகையான திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள், அவல்பொரி, மோதகம், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பதார்த்தங்களை படைத்து, வழிபட்டனர்.
திருப்பூர் குலாலர் பிள்ளையார் கோவிலில், சிறப்பு அபிேஷகத்தை தொடர்ந்து, விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.டவுன் ஹால் செல்வ விநாயகர் கோவிலில், கடந்த இரண்டு நாட்களாக சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் வெண்ணெய் காப்பிலும், நேற்று சந்தன காப்பு அலங்காரத்திலும், விநாயகர் அருள்பாலித்தார். ஸ்ரீராஜ விநாயகர் கோவிலில் கணபதி ேஹமம், அபிேஷகம், அலங்காரபூஜை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
பிச்சம்பாளையம் புதுார் கற்பக விநாயகர் கோவில் உட்பட, விநாயகர் கோவில்கள் அனைத்திலும், அபிேஷக பூஜை, சிறப்பு ேஹாமம், அலங்கார பூஜை, அன்னதானம் என, சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில், விநாயகர் கோவில்களில் வழிபாடு நடத்திய பிறகே, வீடுகளில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடந்தது.
விநாயகர் கோவில் இருந்த இடமெல்லாமல், 'மைக் செட்' பாடல், விளையாட்டு போட்டி, தோரண அலங்காரம் என, பெரிய திருவிழா போல், அந்தப்பகுதியே களைகட்டி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X