ஆரோக்கியத்தில் அக்கறை; பிரதமர் மோடிக்கு பாராட்டு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆரோக்கியத்தில் அக்கறை; பிரதமர் மோடிக்கு பாராட்டு

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி

புதுடில்லி : 'நாட்டு மக்களின் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்திய, முதல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி' என, பிரிட்டனில் இருந்து வெளியாகும், 'லான்செட்' என்ற மருத்துவ பத்திரிகை, செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து, லான்செட் இதழின் தலைமை ஆசிரியர், ரிச்சர்ட் ஹார்டன் எழுதியுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலின் வெற்றியை, மக்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தான் நிர்ணயிக்க போகிறது.

இந்த நேரத்தில், பிரதமர் மோடியின், 'ஆயுஷ்மான் பாரத் திட்டம்' நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 10 கோடி ஏழை குடும்பங்கள் பயன் அடையப் போகின்றன; இது, மோடி அரசுக்கு நற்பெயரை பெற்றுத் தரும்.

இதற்கு நிகரான திட்டத்தை, காங்., தலைவர் ராகுல் சிந்திக்க வேண்டும். சரியான நேரத்தில், நாட்டு மக்களின் சுகாதாரம் குறித்து அக்கறை காட்டும் திட்டத்தை, மோடி அறிவித்துள்ளார். மக்களின் ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்திய, முதல் இந்திய பிரதமர், நரேந்திர மோடி தான். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணிமாறன் - trichy,இந்தியா
14-செப்-201815:24:56 IST Report Abuse
மணிமாறன் நீங்கள் நன்றாக கவனித்து பாருங்கள்..இவரை பாராட்டுபவர்களும் பாராட்டும் பத்திரிகைகளும் வெளிநாட்டினர் தான்... அது ஏன்... எப்படி ?? அவனா ஒட்டு போட போறான்.. இங்கே ஒட்டு போட போகிறவன் தேர்தல் வராதா என்று கருவிக் கொண்டிருக்கிறான்.....
Rate this:
Share this comment
nandaindia - Vadodara,இந்தியா
14-செப்-201815:47:00 IST Report Abuse
nandaindiaஅது ஏனெனில், வெளிநாட்டினர் உங்களை போல் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதில்லை. பணத்திற்கு ஓட்டு போடுவதில்லை. எது எப்படியோ, மீண்டும் பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர்த்த ஒட்டு மொத்த இந்தியாவும் தயாராகி கொண்டிருப்பதை மறைமுகமாக சொன்னதற்கு உங்களுக்கு நன்றிகள் பல....
Rate this:
Share this comment
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-செப்-201815:20:09 IST Report Abuse
ஜெயந்தன் மன்னன் ஆரோக்கியமாக இருந்தால் மக்கள் எல்லோரும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.. அதானே ..சொம்புகளே
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
14-செப்-201814:49:36 IST Report Abuse
இந்தியன் kumar கட்சிக்காரர்கள் அவரவர் கட்சி தலைவர்களை புகழ்ந்தும் மற்றவர்களை இகழ்ந்தும் எழுதுகிறார்கள் பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவில் தான் தெரிய வரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X