பார்க்கிங் வசதி இல்லை: வெயிலில் வெடிக்கும் சைக்கிள் டயர் டியூப்:மேற்கூரையுடன் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்| Dinamalar

தமிழ்நாடு

பார்க்கிங் வசதி இல்லை: வெயிலில் வெடிக்கும் சைக்கிள் டயர் டியூப்:மேற்கூரையுடன் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சிவகாசி;மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு சைக்கிளில் தான் செல்கின்றனர். ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் சைக்கிளை நிறுத்துவதற்கான சைக்கிள் ஸ்டாண்ட் இருப்பதில்லை. இதனால் திறந்தவெளியில் நிறுத்த வேண்டிய அவலம் தொடர்கின்றது.
மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. பள்ளிக்கு அதிக துாரத்திலிருந்து வருகின்ற மாணவர்கள் பஸ்களில் வந்து விடுவர். ஐந்து கி.மீ., துாரத்திலிருந்து வரை வருகின்ற பெரும்பாலான மாணவர்கள் சைக்கிளில் தான் வருகின்றனர். நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு, சைக்கிளில் வருகின்றனர். கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களுக்கு சைக்கிள் என்பது மிகப்பெரிய வாகனம். ஆனால் பள்ளியில் தங்களுடைய சைக்கிளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு முறையான காப்பக வசதி இல்லாததால், திறந்தவெளியில் தான் சைக்கிளை நிறுத்துகின்றனர். வெயில் காலங்களில் சைக்கிள் டயர் டியூப் வெடித்து விடுகிறது. இதனால் மாணவர்கள் சைக்கிளை தள்ளிக் கொண்டே செல்கின்றனர்.
மழைக்காலங்களில் சைக்கிள் மழையில் நனைந்து துருப்பிடித்து விடுகிறது. தனியார் பள்ளிகளில் இதுபோன்ற நிலை இல்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தான் இப்படி நடக்கிறது. சைக்கிள் நிறுத்த இடமிருந்தாலும், மேற்கூரை இல்லாமல் திறந்தவெளியில் நிறுத்த வேண்டியுள்ளது. மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு, இதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவ்வப்போது கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு ஆய்வு செய்ய வருவதுண்டு.
அவர்களின் பார்வையிலும் சைக்கிள் பாதுகாப்பற்ற நிலையில் நிற்பது தென்படும். அவர்களும் அதனை கண்டுகொள்வதில்லை.எனவே பள்ளிகளில் மாணவர்களின் சைக்கிளை நிறுத்துவதற்கு மேற்கூரையுடன் கூடிய சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்.
அடிக்கடி டயர் டியூப் வெடிக்குது
தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சைக்கிளை பாதுகாப்பாக வைக்க ஸ்டாண்ட் அமைத்துள்ளனர். ஆனால் அரசு பள்ளிகளில் திறந்தவெளியில்தான் சைக்கிளை நிறுத்த வேண்டியுள்ளது. வெயில் காலங்களில் டியூப்பில் அடிக்கடி காற்று வெளியேறி, டயர் வெடித்து விடுகிறது. இதனால் மாணவர்கள் சைக்கிளை தள்ளிக் கொண்டே செல்ல வேண்டியுள்ளது. மழைக்காலங்களில் சைக்கிள் நனைந்து துருப்பிடிக்கிறது. பள்ளிகளில் சைக்கிள் ஸ்டாண்ட் அமைக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--சரவணக்குமார், திருத்தங்கல் ,தனியார் ஊழியர்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-செப்-201806:49:14 IST Report Abuse
Bhaskaran அரசுப்பள்ளிகளில் வகுப்பறைகளின் பராமரிப்பே பரிதாபம் இந்நிலையில் சைக்கிள் ஷெட் கட்ட எங்குபோவார்கள் நகரில் உள்ள தனியார் நிறுவனங்கள் ஜவுளிகடைகள் போன்றவை இந்த உபகாரத்தை செய்தால் பெரிய புண்ணியமாக போகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X