'தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட தனி அமைப்பு உருவாகும்' அழகிரி ஆதரவாளர் தகவல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தி.மு.க.,வுக்கு பாடம் புகட்ட தனி அமைப்பு உருவாகும்' அழகிரி ஆதரவாளர் தகவல்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:''தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டும் வகையில் தனி அமைப்பு உருவாக்கி, அழகிரியின் வலிமையை வெளிப்படுத்துவோம,'' என அவரது ஆதரவாளர் இசக்கிமுத்து கூறினார்.
தி.மு.க.,வில் தன்னையும், ஆதரவாளர்களையும் மீண்டும் சேர்க்கவேண்டும் என அழகிரி வலியுறுத்தி வருகிறார். கட்சி தலைமை இதை கண்டுகொள்ளாத நிலையில் தன்னுடைய பலத்தை நிரூபிக்க, சென்னையில் கருணாநிதி நினைவாக பேரணி நடத்தினார். இதற்கு பிறகும் கட்சி தலைமை மவுனமாகவே உள்ளது.இந்நிலையில் அவரது ஆதரவாளரான மதுரை நகர் தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் இசக்கிமுத்து நமது நிருபரிடம் கூறியதாவது:
நாங்களாக யார் வீட்டு கதவையும் தட்டமாட்டோம். எங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க.,23 தொகுதிகளில் வென்றது. அதில் 12 தென்மாவட்ட தொகுதிகள். கருணாநிதியை முன்னிலைப்படுத்தியதால்தான் 2016 தேர்தலில் தி.மு.க., 83 தொகுதிகளில் வென்றது.தி.மு.க., நிர்வாகிகள் பலர் அழகிரியுடன் மறைமுக தொடர்பில் உள்ளனர்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு பின் அழகிரியின் செல்வாக்கை தி.மு.க., தலைமை புரிந்து கொள்ளும். நாங்கள் தனிக்கட்சி அமைக்கப் போவதில்லை. தி.மு.க.,வுக்கு பாடம் புகட்டும் வகையில் தனி அமைப்பு உருவாக்கி, அழகிரியின் வலிமையை வெளிப்
படுத்துவோம். இரண்டு, மூன்று மாதங்களில் அமைப்பு உருவாகும்.தி.மு.க.,வுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அது இருக்கும். அழகிரியின் வீட்டுக்கதவை தட்டும் நிலையை உருவாக்குவோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-செப்-201815:49:07 IST Report Abuse
Bhaskaran திடீர்னு மனம் மாறி அழகிரியை திமுகவில் ஏத்துக்கிட்டாங்கன்னா பேசினபேச்செல்லாம் வீண் அதனால் வார்த்தையை கவனமா பயன்படுத்தும்
Rate this:
Share this comment
Cancel
Perambur Annan - Chennai,இந்தியா
14-செப்-201812:42:24 IST Report Abuse
Perambur Annan தட்டுங்கள் திறக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
Vilathur Nandhiyar - THANJAVUR ,இந்தியா
14-செப்-201812:40:09 IST Report Abuse
Vilathur Nandhiyar திமுக விற்கு புகட்ட போகும் பாட திட்டத்தில் ...திருமங்கலம் பார்முலாவை சேருங்கள் , சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சேருங்கள் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X