Poor health of HAL led to collapse of Rafale deal under UPA: Nirmala Sitharaman Read more at: //economictimes.indiatimes.com/articleshow/65799175.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst | ரபேல் போர் விமானங்களை குறைந்த விலைக்கு வாங்குகிறோம் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரபேல் போர் விமானங்களை குறைந்த விலைக்கு வாங்குகிறோம் - நிர்மலா சீதாராமன் பெருமிதம்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (84)
Advertisement
ரபேல் போர் விமானங்கள் , நிர்மலா சீதாராமன் , டசால்ட் ஏவியேசன், பிரான்ஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் , ஏ.கே.அந்தோணி,  பாஜக, காங்கிரஸ் , பிரான்ஸ் டசால்ட் ஏவியேசன், நிர்மலா, 
Rafael fighter jets, Nirmala Sitaraaman, dassault Aviation, France, Hindustan Aeronautical Limited, AK Antony, BJP, Congress, France dassault Aviation, Nirmala, dassault aviation French aerospace company,

புதுடில்லி: முந்தைய காங். ஆட்சியில் வாங்க நினைத்த விலையை விட குறைவான விலையில் ரபேல் போர் விமானங்கள் வாங்குகிறோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி, காங். ஆட்சியின் போது 126 'ரபேல்' போர் விமானங்களை வாங்குவதற்காக, பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்துடன் 2012-ம் ஆண்டு பேச்சுவார்த்தை தொடங்கியது. பறக்கும் நிலையில் 18 விமானங்களை டசால்ட் ஏவியேசன் நிறுவனம் சப்ளை செய்ய வேண்டும் என்பதும், மீதி விமானங்களை இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்துடன் (எச்.ஏ.எல்.) இணைந்து டசால்ட் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்பதும் திட்டம் ஆகும்.இது தொடர்பான பேச்சுவார்த்தையில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் போதிய திறனை பெற்று இருக்கவில்லை என்பதால் இந்தியாவில் தயாரித்தால், செலவு அதிகரிக்கும் என டசால்ட் ஏவியேசன் கருதியது.
இந்நிலையில் 2013-ம் ஆண்டு, செலவு குறித்த பேச்சுவார்த்தை குழு, இந்த பேரத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தபோது, அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த ஏ.கே.அந்தோணியின் தலையீட்டால், ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அவர் நினைத்திருந்தால், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்துக்கு அரசு நிதியை அளித்து, பலப்படுத்தி இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

பின்னர் பா.ஜ. அரசு பொறுப்பேற்ற போது 2016-ம் ஆண்டு, 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடி செலவில் கொள்முதல் செய்ய பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இதில் ஊழல் நடந்திருப்பதாக காங். குற்றம்சாட்டுகிறது. காங.,ஆட்சியில் வாங்க நினைத்த விலையை விட 9 சதவீதம் விலை குறைவாகவே வாங்குகிறோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-செப்-201814:56:06 IST Report Abuse
ஜெயந்தன் பிஜேபி யும் காங்கிஸும் "ஊழல்" என்ற நாணயத்தின் ஒரே பக்கம் தான்.... அதில் இரண்டுமே ஒண்ணுக்குள் ஒண்ணு.. மக்கள் ஏமாளிகள்.. 2G மாதிரி இந்த படம் அடுத்த தேர்தல் வரை ஓடும்..
Rate this:
Share this comment
Cancel
மணிமாறன் - trichy,இந்தியா
14-செப்-201814:52:49 IST Report Abuse
மணிமாறன் ..குரூட் ஆயிலையும் எங்கேயாவது கம்மியா வாங்கி பெட்ரோல் டீசல் விலையை குறையுங்க.. அதுதான் முக்கியம்....
Rate this:
Share this comment
Cancel
Power Punch - nagarkoil,இந்தியா
14-செப்-201814:50:56 IST Report Abuse
Power Punch ரொம்ப நாளா கேட்கும் கேள்வி..என்ன விலை ???? அது மட்டும் ஏன் பரம ரகசியம் ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X