8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தடை

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
எட்டு வழிச்சாலை, சென்னை ஐகோர்ட், மத்திய அரசு

சென்னை: சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது.


வழக்கு

சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.


அறிக்கை

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், திட்டம் குறித்து, அறிக்கையில் முரண்பாடு உள்ளதால், 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என கேள்வி எழுப்பினர்.


ஒத்திவைப்பு

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர், அறிக்கையில் மாற்றம் ஏதும் இல்லை. எட்டு வழிச்சாலையில் மாற்றம் செய்வது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இன்னும் முடிவு ஏதும் எடுக்கவில்லை. இதனால், முடிவெடுக்கும் வரை, நிலம் கையகப்படுத்தும் பணி 2 வார காலம் நிறுத்தி வைப்பதாக கூறினார்.

இந்நிலையில், மறு உத்தரவு வரும் வரை எட்டு வழிச்சாலை பணிகளுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
christ - chennai,இந்தியா
15-செப்-201810:29:07 IST Report Abuse
christ சாலை வசதியே இல்லாத பல மலை கிராமங்கள் ,அதில்வசிக்கும் மக்கள் பல வருடங்களாக பல கிலோமீட்டர் நடந்தே இன்றும் கடைகளுக்கும் ,பள்ளிகளுக்கும் வந்து செல்கின்றனர் .அது போன்ற இடங்களுக்கு சாலை வசதி செய்வதற்கு துப்பை காணும். சேலம் சென்னை பல சாலைகள் இருந்தும் யாரோ ஒரு தனிப்பட்ட நபர் பயன்பெற பசுமையை அழித்து பசுமை வழி சாலை அமைக்க முற்படுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
15-செப்-201809:26:07 IST Report Abuse
tamil இதைத்தான் அனைவருமே சொல்லி வந்தார்கள் அவர்கள் அனைவருமே நக்ஸல்களாகவும் , தீவிரவாதிகளாகவும், தேச விரோதிகளாகவும் விமர்சிக்கப்பட்டார்கள் அப்படியானால் இந்த தீர்ப்பை கொடுத்த நீதிமன்றத்தை விமர்சிக்கமுடியுமா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-செப்-201808:24:07 IST Report Abuse
Srinivasan Kannaiya தேன் கூட்டை களைத்தாகிவிட்டது ...இனி வருவதை எதிர்கொள்ளவேண்டியதுதான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X