மல்லையா தப்பியதன் பின்னணியில் பிரதமர்: ராகுல் புகார்| Dinamalar

மல்லையா தப்பியதன் பின்னணியில் பிரதமர்: ராகுல் புகார்

Updated : செப் 14, 2018 | Added : செப் 14, 2018 | கருத்துகள் (100)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Rahul Gandhi,Vijay Mallya, PM Modi,  Arun Jaitley, காங்கிரஸ், மல்லையா,  ராகுல் காந்தி, விஜய் மல்லையா, மோடி, ராகுல் புகார், தொழிலதிபர் விஜய் மல்லையா, பிரதமர் மோடி , காங்கிரஸ் தலைவர் ராகுல், கடன் மோசடி சர்ச்சை, மல்லையா விவகாரம் ,  அருண்ஜெட்லி , Congress,Rahul, நரேந்திர மோடி, பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்,ஜெட்லி, Jaitley, 
Congress, Mallya,  Modi, Rahul Complaint, Businessman Vijay Mallya, Prime Minister Modi,Congress leader Rahul Gandhi, Narendra Modi, Prime Minister Narendra Modi,

புதுடில்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்ற விவகாரத்தின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


சர்ச்சை

ரூ.9 ஆயிரம் கோடி கடன்மோசடி சர்ச்சையில் சிக்கி லண்டனில் தங்கியுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, தான் வெளிநாட்டிற்கு செல்வதற்கு முன்னர், நிதி அமைச்சர் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், இதனை மறுத்துள்ள ஜெட்லி, தன்னை சந்திக்க மல்லையாவுக்கு அனுமதி கொடுத்தது இல்லை. மல்லையா தன்னிடம் பார்லிமென்ட் வளாகத்தில் ஒரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார். கடனை திருப்பி கொடுப்பது தொடர்பாக வங்கிகளை அணுகுமாறு கூறிவிட்டதாக தெரிவித்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி அமைச்சர் பதவியிலிருந்து அருண்ஜெட்லி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


நம்ப முடியாது

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்ட அறிக்கை: விமானத்தில் தடுத்து நிறுத்தும் நோட்டீசை, தகவல் தெரிவிக்கும் நோட்டீசாக சிபிஐ மாற்றியதால், விஜய் மல்லையா எளிதாக தப்பி சென்றார். சிபிஐ நேரடியாக பிரதமருக்கு தகவல் அளிக்கும். ஒரு முக்கிய நபர், சர்ச்சைக்குரிய வழக்கில், பிரதமரின் அனுமதியில்லாமல், லுக் அவுட் நோட்டீசை மாற்றியிருக்கும் என்பது ஏற்று கொள்ள முடியாது. இவ்வாறு அதில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஈரோடுசிவா - erode ,இந்தியா
15-செப்-201800:33:11 IST Report Abuse
 ஈரோடுசிவா அட லூசுப்பயலே .... முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை மிரட்டி உங்கள் டுபாக்கூர் கம்பெனிகளுக்கு பல ஆயிரம் கோடி கடன் கொடுக்கச்சொன்னதை நீங்கள் என்பது உலகத்துக்கே தெரியும் .... மக்களை முட்டாள்கள் என்று எண்ண வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
14-செப்-201823:09:15 IST Report Abuse
Sheri மாண்புமிகு ராகுல் அவர்கள் தனது சர்ஜிகள் strike ஆரம்பித்து விட்டார். இனி நம் ப்ரதான் மந்திரி பதவி தாக்கு பிடிப்பது சிரமம் தான்.
Rate this:
Share this comment
Cancel
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா
14-செப்-201822:20:41 IST Report Abuse
சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். மல்லையா - ஜெட்லி விஷயத்துல காங்கிரஸ் வழக்கம் போல செல்ஃப் கோல் போட்டுக்குச்சி'னே சொல்லலாம். March 1 2016 11 To 11.45 am: ஜெட்லீ ராஜ்ய சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டார். 11.46 to 12pm: முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி'யுடன் ஒரு கலந்துரையுடல் நிகழ்ச்சிக்காக டில்லி விக்ஞான் பவன்'னுக்கு ப்றப்பட்டார். 12 to 1.15 pm: கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிந்து அவர் பாராளுமன்றம் திரும்பவே இல்லை. விக்ஞான் பவனிலேயே ஒரு செய்தி நிறுவத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி பட்ஜெட் பற்றிய ஒரு நேர்முக பேட்டி அளிக்கிறார். இப்பொழுது சொல்லுங்கள். பார்லிமெண்ட் சென்ட்ரல் ஹாலில் 20 நிமிடங்கள் மல்லையாவை அவர் எப்படி சந்தித்திருக்க முடியும்?? இதை புட்டு புட்டு வைப்பது நான் இல்லே. "CNN News18"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X