குடும்ப நிறுவனங்களில் இந்தியாவுக்கு 3வது இடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குடும்ப நிறுவனங்களில் இந்தியாவுக்கு 3வது இடம்

Added : செப் 14, 2018 | கருத்துகள் (15)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
India,third,family-owned businesses,world,குடும்ப நிறுவனங்கள்,இந்தியா,3வது இடம்

புதுடில்லி : உலகளவில், குடும்பத்தினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இது குறித்து, 'கிரெடிட் சூசி' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: உலகிலேயே, சீனாவில் தான், குடும்ப நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இங்கு, 159 நிறுவனங்கள், குடும்பத்தினரால் வழி வழியாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த இடத்தில், 121 நிறுவனங்களுடன் அமெரிக்கா உள்ளது.

இந்தியா, 83,900 கோடி டாலர் சந்தை மூலதனத்தில் இயங்கும், 111 நிறுவனங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஜப்பான் ஆசிய பிராந்தியம் நீங்கலான நாடுகளில், சீனா, இந்தியா, ஹாங்காங் ஆகியவை, முதல் மூன்று இடங்களில் உள்ளன.

நான்காம் இடத்தில் உள்ள தென் கொரியாவில், 43 குடும்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. அடுத்த இடங்களில் உள்ள இந்தோனேஷியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில், தலா, 26 குடும்ப நிறுவனங்கள் உள்ளன.

கடந்த, 2006 முதல், இந்தியாவில், குடும்ப நிறுவனங்களின் பங்கு முதலீடு மீதான ஆண்டு சராசரி வருவாய், 13.9 சதவீதமாக உள்ளது. இது, குடும்ப உரிமையாளர்கள் இல்லாத நிறுவனங்களின், 6 சதவீத ஆண்டு சராசரி பங்கு முதலீட்டு வருவாயை விட அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-செப்-201810:55:52 IST Report Abuse
Nallavan Nallavan தவறில்லையே ?
Rate this:
Share this comment
Cancel
15-செப்-201809:56:48 IST Report Abuse
Karthik அரசியல சேர்த்து இன்னும் கொஞ்சம் அதிகமாகும். நேரு, அப்துல்லா, பட்நாயக், லாலு, முலாயம், கருணாநிதி, கவுடா, NTR, தாக்கரே,சிந்தியா, பவார்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-செப்-201808:10:06 IST Report Abuse
Srinivasan Kannaiya ரொம்ப கவலை படவேண்டாம்... இன்னும் சில ஆண்டுகளில் இவர்களே ஆண்டாள் இந்தியா முதலாக வந்துவிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X