ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம்: இந்தியாவுக்கு அமெரிக்கா மிரட்டல் Dinamalar
பதிவு செய்த நாள் :
மிரட்டல்!
ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம்
இந்தியாவுக்கு நிபந்தனை விதிக்கிறது அமெரிக்கா

வாஷிங்டன் : ஈரானிடமிருந்து, கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக, அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது; இது, இந்தியாவுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.

ஈரான்,கச்சா எண்ணெய்,வாங்க வேண்டாம்,இந்தியா,அமெரிக்கா,மிரட்டல்


மேற்காசிய நாடுகளில் ஒன்றான ஈரானுடன் செய்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, சமீபத்தில் விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நாடுகள், நவ., 4க்குள், அதை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இது குறித்து, அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக விவகாரங்கள் துறை அமைச்சக துணை அமைச்சரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான, மணிஷா சிங், அமெரிக்க பார்லிமென்ட் கூட்டத்தில் கூறியதாவது:

அரசு தீவிரம் :


ஈரான் மீதான தடை விவகாரம் குறித்து, தோழமை நாடுகள் அனைத்துடனும், அமெரிக்கா பேசி வருகிறது. ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை முழுமையாக அமல்படுத்துவதில், அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஈரானிடம் இருந்து, கச்சா எண்ணெய் இறக்குமதி

செய்து வரும், இந்தியா உள்ளிட்ட நாடுகள், நவ., 4க்குள், அதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.இல்லாவிடில், அந்த நாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயத்தில், யாருக்கும் விதியை தளர்த்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, மூத்த, எம்.பி., எலியட் எங்கல் பேசியதாவது: ஈரானிடம் இருந்து, சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள், அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குகின்றன. அவை, கச்சா எண்ணெய் வாங்குவதை முழுமையாக கைவிட மறுத்தால், அந்த நாடுகளை, உலகளாவிய வங்கி நடைமுறையில் இருந்து நீக்க, அமெரிக்கா தயாராக உள்ளதா? இவ்வாறு அவர் பேசினார்.

அதற்கு பதில் அளித்த மணிஷா சிங் கூறியதாவது: ஈரான் விஷயத்தில், மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க, அமெரிக்கா தயாராக உள்ளது. ஈரான், தவறான நோக்கத்துக்காக நிறைவேற்றி வரும் அணுசக்தி திட்டங்களை, ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம். ஈரானுக்கு சரியான பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஈரானிடம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் விலக்கு அளிக்கும்படி, அமெரிக்காவுடன், இந்தியா பேச்சு நடத்தி வருகிறது. இருப்பினும், அமெரிக்காவின் தடை உத்தரவை மதிக்கும் வகையில், ஈரானிடம் இருந்து வாங்கி வரும் கச்சா எண்ணெய் அளவை, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில், இந்தியா பாதியாக குறைக்கும் எனத் தெரிகிறது.

கட்டாயம் :


இதை எதிர்பார்த்து, ஏப்ரல் - ஆகஸ்டு மாதங்களில், ஈரானிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை, இந்தியா வாங்கிக் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்திய பொருளாதாரம்,

Advertisement

அதிகளவில் அமெரிக்காவை நம்பியே உள்ளது. எனவே, நம் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, அமெரிக்காவின் நல்லெண்ணத்தை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு, பாதியாக குறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

பணவீக்கம் அதிகரிக்கும் :

ஈரானிடம் இருந்து, சீனாவுக்கு அடுத்தபடி, அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. நட்பு நாடான இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெயை, ஈரான் அளித்து வருகிறது. தவிர, கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் செலவை, ஈரான் ஏற்று வருகிறது. எண்ணெய்க்கான பணத்தை செலுத்துவதற்கு, 60 நாள் வரை, ஈரான், அவகாசம் அளித்து வருகிறது. வேறு நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நிலை உருவானால், அது, இந்தியாவுக்கு பெரியளவில் நிதிச் சுமையை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியா, கூடுதலாக செலவழிக்க நேரிடும். அது, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையில், 50 புள்ளிகள் அதிகரிக்கச் செய்யும்; பணவீக்கமும் கணிசமாக உயரும். இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை தவிர்த்து, வேறு நாடுகளில் வாங்கினால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் வாய்ப்பு உள்ளது. அதனால், பெட்ரோல், டீசல் விலை, மேலும் அதிகரிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
21-செப்-201818:19:33 IST Report Abuse

நந்தினி திவ்ய பாரதிஏதுகூ கஜ்ஜா எண்ணே வாங்குகூடதமா

Rate this:
மணிமேகலை - paris ,பிரான்ஸ்
16-செப்-201800:30:48 IST Report Abuse

மணிமேகலை  மோடியோட ஆட்டத்துக்கு அமெரிக்காக்காரன் வச்சாம்பாரு ஆப்பு .

Rate this:
Arasu - Ballary,இந்தியா
17-செப்-201816:37:39 IST Report Abuse

Arasuஉங்கள் வார்த்தைகளில் ஒரு திருப்தி, சிறு சந்தோசம் தெரிகிறது, நஷ்டம் மோடிக்கு அல்ல இந்தியாவுக்கு, ஆக இந்தியாவுக்கு நஷ்டமேற்பட்டாலும் உங்களுக்கு சந்தோஷமே...

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-செப்-201822:06:14 IST Report Abuse

Pugazh Vவண்டலூரிலிருந்து நடந்து/ பஸ்ஸில்/ மாட்டுவண்டி யில் வந்திருக்கிறீர்களா

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X