'மல்லையா தப்பியதில் மோடிக்கு பங்கு': காங்., தலைவர் ராகுல் மீண்டும் புகார் Dinamalar
பதிவு செய்த நாள் :
'மல்லையா தப்பியதில் மோடிக்கு பங்கு'
காங்., தலைவர் ராகுல் மீண்டும் புகார்

புதுடில்லி : பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, பிரிட்டனுக்கு தப்பியோடியதில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பங்கு உள்ளதாக, காங்., தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Congress,Modi,Narendra modi,Rahul,Rahul Gandhi,Vijay Mallya,காங்கிரஸ்,நரேந்திர மோடி,மல்லையா,மோடி,ராகுல்,ராகுல் காந்தி,விஜய் மல்லையா


கர்நாடகாவைச் சேர்ந்த மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையா. இவர், கிங்பிஷர் விமான நிறுவனம் துவங்க, வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனுக்கு தப்பியோடினார்.

அவரை மீட்டு, இந்தியாவுக்கு அழைத்து வர, மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இந்தியாவை விட்டு வெளியேறும் முன், மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லியுடன், சமரச பேச்சு நடத்தியதாக, விஜய் மல்லையா, சமீபத்தில் கூறியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 'டுவிட்டர்' சமூக தளத்தில், காங்., தலைவர், ராகுல் நேற்று கூறியுள்ளதாவது: சி.பி.ஐ., வெளியிட்ட, 'நோட்டீஸில்' விமான நிலையத்தில், மல்லையாவை பார்த்தால் கைது செய்ய வேண்டும் என குறிப்பிடுவதற்கு பதில், 'தகவல் தெரிவிக்க வேண்டும்' என, மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. சி.பி.ஐ.,யும், இதை ஒப்புக் கொண்டுள்ளது.

Advertisement

மல்லையா, வெளிநாட்டுக்கு தப்பியோட வாய்ப்பில்லை என நம்பியதாக, சி.பி.ஐ., இதற்கு காரணம் கூறுகிறது. வழக்குகள் குறித்து, பிரதமருக்கு தகவல் சொல்ல வேண்டிய நிலையில், சி.பி.ஐ., உள்ளது. முக்கியமான வழக்குகளில், பிரதமர் மோடியின் ஒப்புதல் இல்லாமல், மல்லையாவை தேடுவது தொடர்பான, நோட்டீஸில் மாற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு நேரடி பங்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (47+ 101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivan Mainthan - Coimbatore,இந்தியா
15-செப்-201823:37:22 IST Report Abuse

Sivan Mainthanவிக்ரமாதித்தன்: ராகுல் லண்டன் போனப்போ மல்லையாவை பார்த்தாரா இல்லையா? அடுத்தது எங்க ஆட்சிதான், ஒரு பிட்டை போடு என்று கண்ணடித்தாரா? வேதாளம்: ???? என் மவுனத்தை கலைத்துவிட்டாய், இதைவிட முருங்கை மரத்தில் தொங்குவது எவ்வ்வளவோ பரவாயில்லை.

Rate this:
15-செப்-201822:09:00 IST Report Abuse

kulandhaiKannanமல்லையா மீண்டும் இந்தியா வரக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார் ராகுல்

Rate this:
15-செப்-201820:30:18 IST Report Abuse

GanesanMaduraiபப்பூ பேசாம ஒரு தபா லண்டன் போயி "கணணடிச்சு" மல்லையாவ என்னான்னு கேளுலெ.

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X