பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க மண்டபத்தில் புதிய ரோந்து கப்பல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க மண்டபத்தில் புதிய ரோந்து கப்பல்

Updated : செப் 15, 2018 | Added : செப் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க மண்டபத்தில் புதிய ரோந்து கப்பல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு புதிய ரோந்து கப்பல் வழங்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், தனுஷ்கோடி, மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, போதை வஸ்துகள் கடத்தி செல்வது அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்புள்ளது. இதனை தடுக்க மன்னார் வளைகுடா பகுதியில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சார்லி(சி)-432 ரோந்து கப்பல் பணியில் ஈடுபட்டுள்ளது.

இது காரைக்காலில் இருந்து மண்டபம் இந்திய கடலோர காவல் படை நிலையத்திற்கு வந்தது. இதை மண்டபம் கடலோர காவல் படை கமாண்டர் வெங்கடேஷ் வரவேற்றார். இந்த கப்பல் மூலம் நேற்று முதல் ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில் ரோந்து பணி துவங்கப்பட்டுள்ளது.

இதில் பயங்கரவாதிகளை கண்காணிக்க கூடிய நவீன ரேடார் கருவி, அதிநவீன இயந்திர துப்பாக்கி, மணிக்கு 60 கி.மீ.,வேகத்தில் செல்லும் திறன் கொண்ட இஞ்சினும் உள்ளது. தத்தளிக்கும் மீனவர்களை மீட்கவும் உறுதுணையாக இருக்கும் என பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X