விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: 2வது நாளாக மோதல்; போலீஸ் தடியடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: 2வது நாளாக மோதல்; போலீஸ் தடியடி

Added : செப் 14, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: 2வது நாளாக மோதல்; போலீஸ் தடியடி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர்.செங்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு ஹிந்து அமைப்புகள் சார்பில் வீரவிநாயகர் சிலையை வண்டிமலைச்சி அம்மன் கோயில் பகுதியில் வைப்பதற்காக மேளதாளங்களுடன் சென்றனர். 9:00 மணிக்கு மேலுார் ரோடு பம்ப் ஹவுஸ் பகுதியில் செல்ல மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 10 பேர் காயம் அடைந்தனர். கார், டூவீலர்கள் சேதம் அடைந்தன. தொடர்ந்து விநாயகர் சிலை கொண்டு செல்லப்பட்டது.
போலீஸ் குவிப்பு : நேற்று விநாயகர் சிலையை நீரில் கரைப்பதற்காக ஊர்வலம் செல்ல இருந்தனர். போலீஸ் ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி., கபில்குமார் சரட்கர், எஸ்.பி., அருண்சக்திகுமார், துணை கமிஷனர் சுகுணாசிங் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எதிர்தரப்பினருடன் கலெக்டர் ஷில்பா பேச்சு நடத்தினார். குறிப்பிட்ட தெருக்கள் வழியாக 37 விநாயகர் சிலைகளை கொண்டு செல்ல நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளதையும், அந்த வழியாக அமைதியாக செல்வர் எனவும், இதற்கு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அவர்களும் இதை ஏற்றுக் கொண்டனர்.
மீண்டும் கல்வீச்சு : மதியம் 12:30 மணிக்கு வண்டிமலைச்சி அம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை ஊர்வலம் கிளம்பியது. குண்டாறு அணை ரோடு, மேலுார் முஸ்லிம் தெருக்கள் வழியாக மீண்டும் மெயின் ரோட்டிற்கு வந்தது.31 சிலைகளில் 8 சிலைகள் அமைதியாக கடந்து சென்று ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள குண்டாற்றில் கரைக்கப்பட்டன. திடீரென சில வீடுகளின் மாடிகளில் இருந்து ஊர்வலத்தின் மீது கல் வீசப்பட்டது. ஊர்வலத்தில் சென்றவர்கள் பதிலுக்கு தாக்கினர். போலீசார் தடியடி நடத்தி இருதரப்பினரையும் கலைத்தனர். ஊர்வலத்தில் சென்றவர்கள் கடைகள், வீடுகள் மீதும் கற்களை வீசினர். கல்வீச்சில் கடைக்காரர் கண்ணன், மாரியப்பன், 'டிவி' நிருபர் செந்தில் உள்ளிட்ட ஐந்துபேர் காயம் அடைந்தனர். தடியடியில் முஸ்லிம் தெருவை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தார். கல்வீச்சில் கடைக்காரர் கண்ணன், மாரியப்பன், 'டிவி' நிருபர் செந்தில் உள்ளிட்ட ஐந்துபேர், தடியடியில் முஸ்லிம் தெருவை சேர்ந்த ஒருவர் காயம் அடைந்தனர்.
மேலுார் சேனை விநாயகர் தெருவில் சுப்பையா என்பவரது வீட்டில் பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டது. ஆறு சிலைகள் மாற்றுப்பாதையில் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. மாலை 6:00 மணிக்குள் அனைத்து சிலைகளும் சர்ச்சைக்குரிய பகுதிகளை கடந்து ஆற்றுக்கு கொண்டுசெல்லப்பட்டன. பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankararaman - chennai,இந்தியா
18-செப்-201806:49:23 IST Report Abuse
sankararaman முஸ்லீம் மத ஊர்வலம் ..பக்ரீத் .நடு ரோட்டில் தொழுகை ..எவ்வளவு இடஞ்சல் . ரோட்டில் முஸ்லீம் சிறுவர்கள் நெஞ்சில் கத்தி வைத்து அடித்து கொள்வது என்ன கலாச்சாரம்? மற்ற சிறுவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. ..பெரியவர்களுக்கே மனம் பதைக்கிறது . இத கோர்ட் கேஸ் போட்டு வாதாடலாம் ..தடை கோரலாம்
Rate this:
Share this comment
Cancel
Mohamed Ilyas - Karaikal,இந்தியா
16-செப்-201809:47:02 IST Report Abuse
Mohamed Ilyas செங்கோட்டை ரஹ்மத் பரோட்டா மற்றும் கோழி கரி இலவசமாக கொடுத்திருந்தால் அந்த கூட்டம் அமைதியாக போய் இருக்கும்
Rate this:
Share this comment
வேலங்குடியான் - Karaikudi,இந்தியா
18-செப்-201813:27:23 IST Report Abuse
வேலங்குடியான்உங்க புரோட்டா கடைக்கு கூட்டம் வரலன்னு கிளப்பி விட்டுருப்பீங்க........
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
16-செப்-201801:17:51 IST Report Abuse
கதிரழகன், SSLC புள்ளையாரை எதுப்பானுவ. அவங்க யாருன்னு தெளிவா சொல்ல தைரியம் இல்ல. அப்படி ஒரு பயம் உண்டாக்கி வெச்சுருக்கானுவ. போடுற போட்டுள்ள அரேபியாவுக்கு பாகிஸ்தானுக்கும் ஓடணும் அப்படி அடிச்சு தொரத்தணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X