அழகிரி தனி அமைப்பு? மகன் தயாநிதி விளக்கம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அழகிரி தனி அமைப்பு?
மகன் தயாநிதி விளக்கம்

மதுரை : ''என் தந்தை தனி அமைப்பு துவங்க போவதாக, இசக்கிமுத்து தெரிவித்துள்ளது, அவரது தனிப்பட்ட கருத்து. தற்போது, ஆதரவாளர்களுடன் ஆலோசனை மட்டுமே நடக்கிறது,'' என, அழகிரியின் மகன் தயாநிதி கூறினார்.

அழகிரி,தனி அமைப்பு?,மகன்,தயாநிதி,விளக்கம்



தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சென்னையில் நடத்திய பேரணியை அடுத்து, மாவட்ட வாரியாக, ஆதரவாளர்களை மதுரைக்கு அழைத்து, அழகிரி ஆலோசனை நடத்துகிறார்.


நேற்று, காஞ்சிபுரம், திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த ஆதரவாளர்கள் சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பு குறித்து,

அச்சிறுப்பாக்கம், முன்னாள், எம்.எல்.ஏ., மதிவாணன் கூறியதாவது: தி.மு.க.,வில் அழகிரியை சேர்க்க வேண்டும். கருணாநிதி குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இருந்து, கட்சியை வழிநடத்த வேண்டும்.


அழகிரியை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து, தலைமை கழகத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


இன்று, அண்ணாதுரையின் பிறந்த நாளை ஒட்டி, மதுரையில் உள்ள, அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அழகிரி மரியாதை செலுத்துகிறார். அழகிரியையும், அவரது ஆதரவாளர்களையும், தி.மு.க.,வில் சேர்க்க வலியுறுத்தி, இன்று கையெழுத்து இயக்கம் துவங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும், 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்று, தி.மு.க., மேலிடத்தில் ஒப்படைக்க, அழகிரி ஆதர வாளர்கள் திட்டமிட்டு உள்ளனர்.


இதற்கிடையில், உசிலம்பட்டியில், அழகிரி மகன் தயாநிதி கூறுகையில், ''தனி அமைப்பு துவங்க போவதாக, இசக்கிமுத்து

Advertisement

தெரிவித்துள்ளது, அவரது தனிப்பட்ட கருத்து. தற்போது, ஆதரவாளர்களுடன் ஆலோசனை மட்டுமே நடக்கிறது,'' என்றார்.

'தி.மு.க.,வை கேளுங்கள்' :

ஆலோசனை கூட்டத்திற்கு பின், அழகிரி கூறியதாவது: என் ஆதரவாளர்கள் தெரிவித்த கருத்துகள் தான், என் கருத்தும். இது வெறும் ஆலோசனைக் கூட்டம் தான். எதிர்காலம் குறித்து, முக்கிய முடிவு எடுக்கப்படும். கட்சியில் என்னை சேர்க்கவில்லையே என, ஏன் என்னிடம் கேட்கிறீர்கள். தி.மு.க.,வில் போய், ஸ்டாலினிடம் கேளுங்கள். என் ஆதரவாளர்களை நீக்கியது குறித்தும், தி.மு.க., தலைமையிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-செப்-201813:21:57 IST Report Abuse

Malick Rajaஇதெல்லாம் சரிப்பட்டு வராது அழகிரி எப்படி வேண்டுமாமாலும் இருக்கலாம் .. திமுகாவுக்கு வந்தால் திமுகவே இருக்காது என்பது ஸ்தாலினுக்கு நன்றாகவே தெரியும் .. அணைத்து தொண்டர்களும் மாற்று கட்சியில் சேருவார்கள் திமுகவின் சொத்து மட்டும் இவர்களிடம் எஞ்சும் அதுவும் நிலைத்திருக்கமுடியாது ஆட்சிமாற்றம் வந்தால் மன்னார்மானிய ஒழிப்பு வந்ததுபோல் சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆகிவிடும் .. இதெல்லாம் தேவையா ? அழகிரி பாட்டுக்கு வருவார் .. போவார் ஆனால் ஒன்றும் நடக்காது

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-செப்-201821:10:31 IST Report Abuse

Pugazh Vயார் திமுக கொடியைப் பயன்படுத்தினாலும் அது கட்சிக்கு பிரபலம் புகழ் தான். எனவே தான் திமுக கொடியை ஊர்வலத்தில் பயன் படுத்தியதை கண்டுகொள்ளவில்லை. இதற்கு பயமல்ல காரணம். வேண்டுமானால் உங்கள் பீஜேபீ ரதயாத்திரை அல்லது கட்சி மாநாட்டில் திமுக கொடியுடன் கலந்து கொள்ளுங்களேன். கண்டுக்க மாட்டார்கள்.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-செப்-201820:41:31 IST Report Abuse

Pugazh Vயார் திமுக கொடியைப் பயன்படுத்தினாலும் அது கட்சிக்கு பிரபலம் புகழ் தான். எனவே தான் திமுக கொடியை ஊர்வலத்தில் பயன் படுத்தியதை கண்டுகொள்ளவில்லை. இதற்கு பயமல்ல காரணம். வேண்டுமானால் உங்கள் பீஜேபீ ரதயாத்திரை அல்லது கட்சி மாநாட்டில் திமுக கொடியுடன் கலந்து கொள்ளுங்களேன். கண்டுக்க மாட்டார்கள்.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X