அண்ணாதுரை 110வது பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அண்ணாதுரை 110வது பிறந்த நாள்: அரசியல் கட்சியினர் கொண்டாட்டம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அண்ணாதுரை, 110வது பிறந்தநாள் விழாவை, அ.தி.மு.க.,- தி.மு.க.,வினர் கொண்டாடினர்.
*பவானி நகர தி.மு.க., சார்பில், அந்தியூர் பிரிவு ரோட்டில், அண்ணாதுரை போட்டோவுக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர செயலாளர் நாகராசன், மாநில மாணவரணி துணை செயலாளர் ரங்கசாமி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


* அவல்பூந்துறையில், தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது. தொடர்ந்து அரச்சலூர், மொடக்குறிச்சி, லக்காபுரம், விளக்கேத்தி, எழுமாத்தூர் பகுதிகளில் தி.மு.க.,வினர் கொடியேற்றினர். நிர்வாகிகள் குணசேகரன், சாமியப்பன், சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


* பவானி நகர அ.தி.மு.க., சார்பில், செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில், உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர்.


* பெருந்துறையில், ஒன்றிய செயலாளர் சாமி தலைமையில், தி.மு.க., பொருளாளர் துரை முருகன், பெருந்துறையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.


* கொடுமுடி புது பஸ் ஸ்டாண்ட் முன், அண்ணாதுரை உருவப்படத்துக்கு, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சிவசுப்ரமணி, ஒன்றிய செயலாளர் புதூர் கலைமணி உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர். இதேபோல், தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் சின்னுசாமி மற்றும் தி.மு.க.,வினர் மரியாதை செலுத்தினர். சிவகிரி, வெள்ளோட்டம்பரப்பு, கருமாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X