பவானிசாகருக்கு நீர்வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பவானிசாகர்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்கிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 742 கன அடியாக இருந்தது, நேற்று காலை, 3,427 கன அடியாக அதிகரித்தது. மாலை, 5:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம், 100.64 அடி, நீர் இருப்பு, 29.2 டி.எம்.சி.,யாக இருந்தது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால், அரக்கன் கோட்டை- தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு, பவானி ஆற்றில், திறக்கப்பட்ட, 650 கனஅடி தண்ணீர், நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டது. கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X