வாய்க்காலில் மூழ்கி மாணவர், தொழிலாளி பலி? நீச்சல் தெரியாததால் சோகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாய்க்காலில் மூழ்கி மாணவர், தொழிலாளி பலி? நீச்சல் தெரியாததால் சோகம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புன்செய்புளியம்பட்டி: கீழ்பவானி வாய்க்காலில் மூழ்கிய, பள்ளி மாணவர், தொழிலாளியை இன்றும் தேடும் பணி நடக்கிறது.
கோவை மாவட்டம், அன்னூர் அக்ரஹார வீதியை சேர்ந்தவர் மன்சூர், 34, சென்டரிங் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த, இவரது உறவினர் நஸீர் மகன் அகமது ஆசிப், 14; அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இருவரும், நேற்று மதியம், பவானிசாகர் அணைப்பூங்காவுக்கு வந்தனர். 2:30 மணியளவில், டணாய்க்கன்கோட்டை கோவில் அருகே, தடை செய்ப்பட்ட பகுதியான, கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி குளித்தனர். பாசனத்துக்காக, 2,300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் வாய்க்கால் நடுவில், ஆழமான பகுதிக்கு சென்ற அகமது ஆசிப், நீச்சல் தெரியாமல் மூழ்கினார். அவரை காப்பாற்ற முயன்ற மன்சூரும், நீச்சல் தெரியாததால் மூழ்கினார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், வாய்க்காலில் இறங்கி தேடினர். ஆனாலும், கிடைக்கவில்லை. சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள், மீனவர்கள், இரண்டு குழுக்களாக பிரிந்து தேடினர். உறவினர்களும், பரிசலில் சென்று, தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி கைவிடப்பட்டது. இன்றும் தேடும் பணி நடக்குமென, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X