பார்லிமென்டில் வைகோ குரல்: காங்., திருநாவுக்கரசர் ஆவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பார்லிமென்டில் வைகோ குரல்: காங்., திருநாவுக்கரசர் ஆவல்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க., மாநாட்டில், ''ஒடுக்கப்பட்ட மக்களை காப்பதற்கான மாற்றம் தேவை,'' என, இ.கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.
ம.தி.மு.க., மாநாட்டில், அவர் பேசியதாவது: தற்போது, தேர்தலில் சீட்டு பெறுவதற்காக கூட்டணி சேர்வதும், ஆதரவு தருவதும் இல்லை. பொதுவுடமை கொள்கை மறுக்கப்படுவதை தடுக்க, ஒன்று சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது பிரச்னை இல்லை. அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை காப்பதற்கான மாற்றம் தேவை. அதற்கான அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சமூக நலனை காக்க அத்தீர்மானம் வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் ஒன்றுபட்டு, போர் புரிய வேண்டும், என்றார்.

மார்க்., கம்யூ., மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சில நேரங்களில் நல்ல கொள்கைகள், நல்ல தலைவர்கள் தேர்தலில் தோல்வி அடைகின்றனர். இதைவைத்து, அரசியல் கொள்கை சரியானதா என்பதை தீர்மானிக்க முடியாது. அரசியல் கட்சிகளுக்கு தனித்தனி கோட்பாடுகள், லட்சியங்கள், கொள்கைகள் உண்டு. அதில், எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது. ஆனால், தேசத்துக்கும், மாநிலத்துக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்போது, இணைந்து செயல்பட்டுள்ளோம், என்பதை நினைவுபடுத்துகிறோம். தமிழ் மொழிக்கு சமாதி கட்டும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டுக்கு சவால் விடுகிறார்கள். அதனை காக்கும் கடமையில், நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம், என்றார்.

தமிழக காங்., தலைவர் சு.திருநாவுக்கரசர்: வைகோவுக்கு ஒரு வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். இன்னும் ஒரு முறை தேர்தலில் நிற்க வேண்டும் என்ற சூழல் வரும்போது, 'நான் போட்டியிடவில்லை' என கூறக்கூடாது. உங்கள் குரல், பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். மத்திய அமைச்சர் ஆகும் வாய்ப்பு வருமாயின், நீங்களே கேபினட் அமைச்சராகி, நீங்களே மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும், என்றார்.

பினாங்கு துணை முதல்வர் ராமசாமி: உலக தமிழர்களுக்காக, தொடர்ந்து குரல் கொடுப்பவர் வைகோ மட்டுமே. இலங்கையில் போர் முடிந்தபின், அரசியல் ரீதியாக தமிழர்களுக்கு மாற்றம் ஏற்படுத்த, பொது வாக்கெடுப்பு கொண்டு வர வலியுறுத்தினோம். அப்போதுதான், சிங்கள மக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டிய நிலை, தமிழர்களுக்கு ஏற்படாது. தனி நாடாக அல்லது அவர்களுக்கான உரிமையுடன் வாழ வாய்ப்பு கிடைக்கும். அத்தீர்மானத்தை, பினாங்கில் நடந்த மாநாட்டில், வைகோ வலியுறுத்தி பேசினார். எந்த அதிகாரத்திலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காக தொடர்ந்து வைகோ போராட வேண்டும். உலக தமிழினம், நல்ல பாதையை தேடிச்செல்ல, வைகோ போன்ற தலைவர்கள் தேவை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X