சி.இ.ஓ., விசாரணை நடவடிக்கை எப்போது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சி.இ.ஓ., விசாரணை நடவடிக்கை எப்போது?

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார் குறித்து, சி.இ.ஓ., விசாரணை செய்தார். ஓரிரு நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது. பள்ளிபாளையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் பலர், ஓரிரு நாட்களுக்கு முன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், 'சில ஆசிரியர்கள், ஆசிரியைகள் குறித்து ஆதாரமற்ற புகார்களை, முதல்வர், கல்வித்துறை அதிகாரிகளுக்கு சிலர் அனுப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தனர். நேற்று முன்தினம், சி,இ.ஓ., உஷா, பள்ளிக்கு சென்று, ஒவ்வொரு ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் விசாரித்தார். மேலும், மாணவர்களிடம் தங்கள் ஆசிரியர் குறித்த கருத்துகளை எழுத்து மூலமாக வாங்கிக் கொண்டார். இதில், மாணவர்கள் பலர் சில ஆசிரியர்கள் குறித்து, ஒளிவு மறைவின்றி எழுதியதாக தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவதால், ஆசிரியர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X