வன உயிரின வார விழா: ஓவியம், பேச்சுப்போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன உயிரின வார விழா: ஓவியம், பேச்சுப்போட்டி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: வன உயிரின வார விழாவை முன்னிட்டு, நாமக்கல்லில் நடந்த ஓவியம், பேச்சுப் போட்டியில், 45 பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த, 300 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழக வனத்துறை சார்பில், வன உயிரின வார விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு மாவட்ட வனத்துறை சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு, ஓவியம், தமிழ் மற்றும் ஆங்கில வழி பேச்சுப்போட்டி, நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் காஞ்சனா தலைமை வகித்து, போட்டியை துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் இருந்து, 45க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த, மாணவ, மாணவியர், 300க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 'போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, வன உயிரின வார விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்' என, வனத்துறையினர் தெரிவித்தனர். வனச்சரகர்கள் ரவிச்சந்திரன், பெருமாள், அறிவழகன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், வனவர்கள், வன பாதுகாவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X