800 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

800 விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

நாமக்கல்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வைத்து பூஜிக்கப்பட்ட, 800க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.
நாடு முழுவதும், கடந்த, 13ல், விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. நகரம், கிராமப்புறம், சாலையோரம் என, பல்வேறு இடங்களில், விநாயகர் சிலைகள் வைத்து, பூஜிக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டம் முழுவதும், 622 சிலைகள் வைக்க போலீசார் அனுமதி அளித்திருந்தனர். அவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. அவை, சரக்கு ஆட்டோ, லாரி போன்ற வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. மோகனூர், ப.வேலூர், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில், கொல்லிமலை அரப்பளீஸ்வரர் ஆற்றிலும் கரைப்பதற்காக எடுத்துவரப்பட்ட சுவாமி சிலைகள், கரையில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, தோளில் தூக்கிக் கொண்டு, ஆற்றுக்குள் சென்று கரைக்கப்பட்டன. ஒரு அடி முதல், 15 அடி உயரம் வரை, மயில், சிங்கம், புலி, பசுமாடு, ஐந்து தலைநாகம் போன்ற பல்வேறு வாகனங்களில் அமர்ந்த நிலையில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகள், பார்ப்பதற்கு பிரமிப்பாக இருந்தன. மோகனூர் காவிரி ஆற்றில், மோகனூர், நாமக்கல், சேந்தமங்கலம், பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட, 700க்கும் மேற்பட்ட சிலைகள், கரைக்கப்பட்டன. மோகனூர் இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையில், ஏராளமான போலீசார் மற்றும் ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், நீச்சல் தெரிந்த உள்ளூர் நபர்கள், மீனவர்கள் என, 10 பேர், இரண்டு பரிசல் இயக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல, ப.வேலூர் மற்றும் குமாரபாளையத்தில், 100க்கும் மேற்பட்ட சிலைகள் என, மாவட்டம் முழுவதும், 800க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X