புகார் பெட்டி - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கரூர்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பூங்காவை பராமரிக்க நடவடிக்கை தேவை: கரூர் அருகே, நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. இதன் எதிரே, சுற்றுலாத் துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன், பூங்கா ஏற்படுத்தப்பட்டது. தற்போது, பூங்கா வில் உள்ள குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளன. இதனால், அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமிகள் பூங்காவில் விளையாட முடிவதில்லை. கோவிலுக்கு வரும் பக்தர்களும் ஏமாற்றத்துக்குள்ளாகின்றனர். பூங்காவை சீரமைத்து பராமரிக்க வேண்டும்.

- எ.லட்சுமணமூர்த்தி, திருகாம்புலியூர்.

நிழற்கூடம் அருகே பஸ்களை நிறுத்த வேண்டும்: கரூர் - சேலம் சாலை, மண்மங்கலம் பஸ் நிறுத்தம் அருகே, நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முன், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், பஸ்களை நிழற்கூடம் அருகே நிறுத்தாமல், தள்ளியே நிறுத்தப்படுகின்றன. காலை நேர பரபரப்பில், பஸ்சுக்காக காத்திருக்கும் தொழிலாளர்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், மழையிலும், வெயிலிலும் கூட நிழற்கூடத்தில் நிற்க முடியாத நிலை உள்ளது.

- எம்.பொன்னுசாமி, பண்டுதகாரன்புதூர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X