தீபாவளி பட்டாசு கடை உரிமம்: வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளி பட்டாசு கடை உரிமம்: வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: தீபாவளி பண்டிகைக்கு, தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் உரிமம் பெற வரும், 28க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தீபாவளி பண்டிகையின்போது தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க, உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முந்தைய காலத்தில், தற்போது தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் கடை வைக்க உரிமம் பெற்றவர்கள், தற்போதைய விண்ணப்பத்துடன் அப்போது பெற்ற உரிம நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களின் பிரதிகள் ஐந்து, கடையின் வரைபடம், மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு போட்டோ, மனுதாரர், உரிமம் கோரும் இடத்தின் உரிமையாளராக இருப்பின், அதற்கான ஆவணங்கள் மற்றும் நடப்பு நிதி ஆண்டில் வீட்டு வரி ரசீது செலுத்திய நகல், உரிமம் கோரும் இடம் வாடகை கட்டடம் எனில், இடத்தின் பத்திர நகல் மற்றும் வீட்டு வரி செலுத்திய ரசீது நகலுடன் கட்டட உரிமையாளரிடம், 20 ரூபாய் முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து, வரும், 28 மாலை, 5:45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, அக்., 20க்குள் பட்டாசு உரிமம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X