அரசு பஸ் மீது உடைந்து விழுந்த மரக்கிளை: போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பஸ் மீது உடைந்து விழுந்த மரக்கிளை: போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: குளித்தலையில், சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் கிளை உடைந்து, அரசு பஸ் மீது விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. குளித்தலை - மணப்பாறை நெடுஞ்சாலையில், சிவாயம் அடுத்த, ஆலமரத்துப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே, நேற்று பகல், 2:30 மணியளவில், மணப்பாறையில் இருந்து குளித்தலைக்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் கிளை உடைந்து, பஸ் மீது திடீரென விழுந்தது. இதனால், பஸ் முன்பக்க கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. பஸ்ஸில் இருந்த பயணிகள் மூன்று பேர் மற்றும் ஓட்டுனர் பாலு ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. கண்டக்டர் உமாமகேஷ்வரன், அவர்களை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இந்த விபத்தால், அப்பகுதியில், 45 நிமிடம் போக்குவரத்து தடை ஏற்பட்டது. குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X