ஆப்பரேட்டரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆப்பரேட்டரிடம் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

குளித்தலை: திருச்சி மாவட்டம், சிறுகமணியை சேர்ந்தவர் சதீஷ்குமார், 22; இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெஷின் ஆப்பரேட்டராக வேலை செய்து வருகிறார். குளித்தலை அடுத்த, மேலமாயனூர் அரசு தொடக்கப் பள்ளி அருகே, நேற்று முன்தினம் காலை, நடந்து சென்றார். அப்போது, பின்னால் ஹோண்டா பைக்கில் வந்த, கட்டளை கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன், 24, அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, சட்டைப் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுக்க முயன்றார். அங்கிருந்த சிலர் அவனை மடக்கிப் பிடித்து, மாயனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார், பைக்கை பறிமுதல் செய்து, அவனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X