அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேதமான குழாய் மாற்றப்படுமா? வெங்கமேடு மார்க்கெட் அருகே, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, ஆழ்துளை குழாய் அமைத்து, அதிலிருந்து தண்ணீர் எடுத்து வினியோகிக்கும் வகையில், சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், அப்பகுதி மக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்நிலையில், குடிநீர் தொட்டியில் இருந்த குழாய் உடைந்து, தண்ணீர் பிடிக்க முடியாத நிலை சில நாட்களுக்கு முன் ஏற்பட்டது. இதனால், அப்பகுதிவாசி கள், வீட்டு உபயோகத்துக்கு தண்ணீர் இல்லாமல் திண்டாடுகின்றனர்.
குண்டும், குழியுமான சாலையால் அவதி: கரூர், கொங்கு நகர், நான்காவது தெருவில், ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அவற்றில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவ்வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், இத்தெருவில் உள்ள சாலை, பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது. மழை பெய்யும் போது, சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்.

சேதம் அடைந்த சாக்கடை மூடிகள்: கரூர் நகராட்சி பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதில் உள்ள ராட்சத குழாய்களில், ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை சரி செய்ய, சாலை நடுவே ஆங்காங்கே திறப்பு அமைக்கப்பட்டு, சிமென்ட் மூடியால் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொங்கு நகர் பிரதான சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்துள்ளது. வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சேதமடைந்த இந்த மூடியை மாற்ற வேண்டும்.

நிழற்கூடத்தில் இருக்கை இல்லை: கரூர் எஸ்.பி., நகரில் பயணிகள் வசதிக்காக, இரண்டு ஆண்டுகளுக்கு முன், நிழற்கூடம் அமைக்கப்பட்டது. அதில் இருக்கைகளும் போடப்பட்டன. சரியான பராமரிப்பில்லாததால், தற்போது அந்த இருக்கைகள் அனைத்தும் உடைந்து விட்டன. இதனால், பஸ் வரும்வரை, உட்கார முடியாமல், பயணிகள் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள் பெரும் அவதிப்படுகின்றனர். நிழற்கூடத்தில், புதிய இருக்கை வசதி செய்ய வேண்டும்.

வாய்க்கால் கரையில் கழிவுகள் தேக்கம்: வாங்கல் முதலியார் பாப்புலர் வாய்க்கால், சமீபத்தில் தூர் வாரப்பட்டது. அப்போது, வாய்க்காலில் இருந்து எடுக்கப்பட்ட கழிவுகளை அள்ளிச் செல்லாமல், கரை மீது போட்டு விட்டனர். தற்போது, வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரை மீதுள்ள குப்பை, கழிவுகள் மீண்டும் வாய்க்காலில் விழுவதால், சுகாதார கேடு ஏற்படுகிறது. அப்பகுதிவாசிகள், வாய்க்காலில் குளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும், பிளாஸ்டிக் கழிவுகள் செல்வதால், விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X