அரசு மருத்துவமனை கட்டுமான பணி: பொதுமக்கள் பங்கு தொகை வழங்கல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை கட்டுமான பணி: பொதுமக்கள் பங்கு தொகை வழங்கல்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கரூர்: வேலாயுதம்பாளையம் தன்னிறைவுத் திட்டத்தில், 15.25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புறநோயாளிகள் பிரிவு கட்டடடத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. இப்பணிக்கு, புகளூர் வட்டார பொது நலக்குழுவினர், பொதுமக்களின் பங்குத் தொகை, 5.09 லட்சம் ரூபாயை நேற்று கலெக்டர் அன்பழகனிடம் வழங்கினார். கடந்த, 1999ல், புகளூர் வட்டார பொது நலக்குழுவின் சார்பில், ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் வாங்கி, வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் பங்குத்தொகையாக, 40 லட்சம் ரூபாய், இக்குழுவால் வழங்கப்பட்டது. இதன் மூலம், 126.55 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வடிவேல், சிவசுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X