நீதிபதிகள் காலி பணியிடங்களை நிரப்ப 15 ஆண்டுகள் ஆகும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நீதிபதிகள் காலி பணியிடங்களை நிரப்ப 15 ஆண்டுகள் ஆகும்

Added : செப் 16, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஐகோர்ட்டுகள், நீதிபதிகள் காலி பணியிடங்கள், வழக்குகள்

புதுடில்லி : தற்போதைய நிலவரப்படி நாடு முழவதிலும் உள்ள ஐகோர்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 75 முதல் 85 நீதிபதிகள் பணி ஓய்வு பெறுகின்றனர். அந்த வகையில் 24 ஐகோர்டுகளில் உள்ள 427 காலியிடங்களை நிரப்ப குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் ஆகும்.

ஐகோர்ட்டுகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 1079 ஆகும். ஆகஸ்ட் 31 ல் 427 பணியிடங்கள் காலியானதால் நீதிபதிகளில் எண்ணிக்கை 652 ஆக குறைந்துளள்ளது. ஐகோர்ட்டுகளில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி சமீபத்தில் மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டாலும் ஆண்டுக்கு 29 நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள்.
2015 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2018 மே மாதம் வரை கூடுதலாக 313 நீதிபதிகள் மட்டுமே சட்ட அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 104 நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வுபெறும் நீதிபதிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதாகவே கருதப்படுகிறது. நீதிபதிகள் காலி பணியிடங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாட்டிலுள்ள ஐகோர்ட்களில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த நீதிபதி பணியிடங்கள் 1079. ஆகஸ்ட் 31-ம்தேதி நிலவரப்படி, ஐகோர்ட்களில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 652. 427 பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் அதிகபட்சமாக ஆண்டுக்கு 104 நீதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள். அதேநேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் 75 முதல் 85 நீதிபதிகள் வரை ஓய்வு பெறுகிறார்கள். இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஐகோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 29 மட்டுமே கூடுகிறது. இதே விகிதத்தில் ஐகோர்ட்களில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் காலிப்பணியிடங்களை நிரப்ப 15 ஆண்டுகள் ஆகும் என, கணக்கிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் காலி பணியிடங்கள் அதிகரிப்பால் ஐகோர்ட்களில் 39.52 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2017 அக்டோபரில் 387 ஆக இருந்த ஐகோர்ட் நீதிபதிகளின் காலி பணியிடங்கள், 2018 மார்ச் மாதத்தில் 406 ஆக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 31 ல் இது 427 ஆக மேலும் அதிகரித்துள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக ஐகோர்டுகளில் உள்ள 65 க்கும் மேற்பட்ட நிரந்தர நீதிபதிகள் ஓய்வு பெற உள்ளனர். அதிகரித்து வரும் ஐகோர்ட் நீதிபதிகளின் காலி பணியிடங்களால் 39.52 லட்சம் வழக்குகள் ஐகோர்ட்களில் நிலுவையில் உள்ளன. இவற்றில் 22 சதவீதம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumaresan - Petaling Jaya,மலேஷியா
17-செப்-201806:25:42 IST Report Abuse
kumaresan நிச்சயமாக வேறு எந்த நாட்டிலும் இந்த அவல நிலை இல்லை. காலம் கடத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். நீதிபதிகளின் நியமனத்தில் ஏன் இவ்வளவு காலம் கடத்தப்படுகிறது?
Rate this:
Share this comment
Cancel
Raghavan - Chennai,இந்தியா
16-செப்-201822:13:14 IST Report Abuse
Raghavan Whose fault
Rate this:
Share this comment
Cancel
Praveen - Chennai,இந்தியா
16-செப்-201817:26:58 IST Report Abuse
Praveen நீதிபதிகள் பற்றாக்குறை ..39.52 லட்சம் வழக்குகள் ஐகோர்ட்களில் நிலுவை. இவற்றில் 22 சதவீதம் வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இந்த லட்ச்சனத்தில் நீதிபதிகளுக்கு கோடை விடுமுறை வேறு... இந்த அவலம் வேறு எங்கும் இருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X